ரஜினிகாந்த் தன்னுடைய மகள் ஐஸ்வர்யாவுடன் சுவாமி தரிசனத்திற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்திருந்தார். திருப்பதி மலையில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்றனர்.
திருமலையில் இரவு தங்கிய அவர் இன்று அதிகாலை மகளுடன் கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவை மூலம் ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து வெளியே வந்த அவரை பார்த்தவுடன் ரசிகர்கள் உற்சாக மிகுதியால் தலைவா, தலைவா என்று கோஷம் போட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய அவர் ஆறு ஆண்டுகளுக்கு பின் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை வழிபட்டது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது என்றார்.
Also see... திருப்பதி லட்டு பிரசாதத்தை ஆன்லைனில் ஆர்டர் செய்யமுடியுமா? - தேவஸ்தானம் விளக்கம்!
மேலும் உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்று இருப்பது பற்றி கேட்டபோது அவருக்கு நேற்றே வாழ்த்து தெரிவித்து விட்டேன். சாமி கும்பிட வந்த இடத்தில் வேறு எதுவும் பேச விரும்பவில்லை என்று கூறி முடித்து கொண்டார்.
செய்தியாளர்: புஷ்பராஜ், திருப்பதி
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aishwarya Rajinikanth, Rajinikanth, Tirumala Tirupati, Tirupati