Home /News /national /

மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!

மணமகனைப் போல குதிரையில் வந்து கெத்து காட்டிய மணப்பெண்!

Rajasthani Bride

Rajasthani Bride

நிச்சயத்தார்த்தம் நடக்கும் போது மணமகனுக்கு மணமகள் வீட்டார் சார்பாக வழங்கப்படும் ரொக்கத் தொகையை மணமகனும் மறுத்துள்ளார்.

பாலின சமத்துவம் இன்னும் பெரும்பாலான இடங்களில் பெயரளவில், பேச்சளவில் தான் இருக்கிறது. எந்தெந்த இடங்களில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்படுகிறது என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆணாதிக்க மனப்பான்மை பல இடங்களில் குறைந்து வருவது போல தோன்றினாலும், பாலின வேறுபாடு என்பதை எளிதாக களைந்து விடகூட முடியாமல் சில இடங்களில் மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பெரிய புரட்சிகளை செய்து தான் பாலின சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற தேவை இல்லை.

குறிப்பாக சொல்ல வேண்டுமானால், பெரிய மாற்றங்களைக் கொண்டுவர, முக்கியமான விஷயங்களில் மாறுதல்களை எற்படுத்த வேண்டும். பாலின சமத்துவத்தை வெளிப்படுத்தும் விதமான, ராஜஸ்தானை சேர்ந்த மணப்பெண் ஒருவர் திருமணத்துக்கு மணமகன் அணியும் ஷெர்வானி ஆடை அணிந்து, குதிரையில் ஏறி வந்துள்ளார்.

தமிழ் நாட்டில் விமரிசையாக நடக்கும் திருமணங்கள் போலவே, வட மாநிலங்களிலும் பல்வேறு சடங்குகளோடு திருமணம் கோலாகலமாக நடத்தப்படும். மாப்பிள்ளை அழைப்பு போல, வட மாநிலங்களின் பெரும்பாலான திருமணங்களில், மணமகன் குதிரை மீதேறி ஊர்வலம் வருவது ஒரு சடங்காக இருக்கும். குதிரை சவாரியில் மணமகன் ஊர்வலம் ஒரு பெருமையாக கருதப்படும். ராஜஸ்தானில் நடக்கும் திருமணங்களில், இந்த சடங்கின்பெயர் ‘பண்டோரி’ என்று அழைக்கப்படுகிறது.

Also read:  இனி வாட்ஸ் அப் மூலம், Uber app பயன்படுத்தாமலேயே Cab-ஐ புக் செய்யலாம் - புதிய வசதி

ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள ரனோலி என்றொரு கிராமத்தில் மணமகன் குதிரையில் ஊர்வலம் வருவதற்கு மாற்றாக, மணமகள் செர்வானி அணிந்து ஊர்வலம் வந்து, பண்டோரி சடங்கை நிறைவேற்றியுள்ளது நாடு முழுவதும் வைரலாக பரவி வருகிறது. ஆண் பெண்ணுக்கிடையே பேதமில்லை, இரு பாலருமே சமமானவர்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக மணப்பெண் கிரித்திகா சைனியின் குடும்பம் இந்த சடங்கை மணப்பெண்ணை வைத்து செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மணப்பெண் கிரித்திக்காவின் இந்த செயல் மிகவும் பாராட்டுக்குரியது. தென் மாநிலங்களை விட, வட மாநிலங்களில், குறிப்பாக கிராமப்பகுதிகளில் பெண்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் இருக்கும். பெண்களுக்கு கல்வி என்பதே அரிது. பல ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் நிலவி வந்ததைப் போலவே, சமையல் மட்டும் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பெண்கள் என்ற நிலை இப்போதும் பல வட மாநில கிராமங்களில் காணப்படுகிறது. திருமணம் மிகவும் முக்கியமான நிகழ்வு என்பதால், மணப்பெண் மணமகனைப் போல ஆடைகள் அணிந்து, குதிரையில் வலம் வந்தது சமூகத்தில் மிகப்பெரிய உதாரணமாக இருக்கும்.

Also read:   ஹேக்கர்களிடமிருந்து ஃபேஸ்புக் அக்கவுண்ட்களுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும் Facebook Protect

நிச்சயத்தார்த்தம் நடக்கும் போது மணமகனுக்கு மணமகள் வீட்டார் சார்பாக வழங்கப்படும் ரொக்கத் தொகையை மணமகனும் மறுத்துள்ளார். கிரித்திகா ஜெய்ப்பூரில் ஃபேஷன் டிசைனிங் கோர்ஸ் முடித்துள்ளார். இவருடைய குடும்பத்தில் இவர் தான் இளைய பெண். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் மற்றும் இரண்டு மூத்த சகோதரர்கள் இருக்கிறார்கள். மணமகள் கிரித்திகா அணிந்திருந்த ஷெர்வானி அவரே தயாரித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: Marriage, Rajasthan

அடுத்த செய்தி