தற்போதைய கணவன் முன்னிலையில் மாஜி கணவரின் சகோதரர் பாலியல் பலாத்காரம்- ராஜஸ்தானில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

தற்போதைய கணவன் முன்னிலையில் மாஜி கணவரின் சகோதரர் பாலியல் பலாத்காரம்- ராஜஸ்தானில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

கோப்புப்படம்

பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சோதனை நடந்து முடிந்தது, அவரும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, தப்பியோடிய மற்றவர்களைப் பிடிக்கவும் வலை வீசப்பட்டுள்ளது.

  • Share this:
ராஜஸ்தான் பாரன் மாவட்டத்தில் பெண் ஒருவரின் முன்னாள் கணவனின் சகோதரன், பெண்ணின் இந்நாளைய கணவன் முன்னிலையிலேயே பாலியல் பலாத்காரம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பாகியுள்ளது.

ராஜஸ்தான் பாரன் மாவட்டத்தில் சம்பவத்தன்று இந்தப் பெண் தன்னுடைய இப்போதைய கணவன் மற்றும் குழந்தை, தனது சிறு வயது சகோதரி ஆகியோருடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது இவருடைய மாஜி கணவனின் சகோதரன் மற்றும் 4 பேர் சஜாவர் என்ற கிராமத்தில் இவர்களை வழிமறித்தனர். இவர்களை மிரட்டி அருகில் உள்ள வயல்வெளிக்கு அழைத்துச் சென்றனர். இவர்கள் அங்கு சென்றவுடன் பெண்ணின் கணவனின் கை கால்களை கயிற்றினால் கட்டிப் போட்டனர். பிறகு கணவனின் முன்னிலையிலேயே மாஜி கணவனின் சகோதரர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், என்று டிஎஸ்பி யோகேந்திர சிங் ஊடகத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து முன்னாள் கணவனின் சகோதரன் மற்றும் இருவரை போலீசார் கைது செய்து ‘விசாரித்து’ வருகின்றனர்.

20-களின் வயதில் இருக்கும் அந்தப் பெண் முதல் கணவனுடன் குழந்தை பிறக்காததால் பிரிந்தார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து நாட பிராதா என்ற அங்குள்ள மரபின் படி திருமண சடங்கு இல்லாமலேயே இன்னொருவரை திருமணம் செய்து கொண்டார் இந்தப் பெண்.

குற்றம் செய்த நபர் சம்பவ இடத்திலிருந்து ஓடிவிட்டார். இவர்கள் பிறகு மெதுவே மெயின் ரோடுக்கு வந்துள்ளனர். அங்கு சிலரிடம் உதவி கேட்டுள்ளனர். இதனையடுத்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து 5 பேர் மீது கும்பல் பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பெண்ணின் மருத்துவச் சோதனை நடந்து முடிந்தது, அவரும் மாவட்ட மேஜிஸ்ட்ரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது, தப்பியோடிய மற்றவர்களைப் பிடிக்கவும் வலை வீசப்பட்டுள்ளது.
Published by:Muthukumar
First published: