லஞ்ச ஒழிப்பு போலீஸிடமிருந்து தப்ப ரூ.500 கட்டுகளை தீயிட்டு கொளுத்திய தாசில்தார்- அதிர்ச்சியடைந்த போலீஸார்

லஞ்சம்

சமையலறை ஜன்னலில் தீப்பிழம்புகளை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் பணத்தை எரித்துக்கொண்டிருந்தனர்.

 • Share this:
  ராஜஸ்தானில் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சிக்காமல் இருக்க லஞ்சமாக வாங்கிய பணத்தை தீயிட்டு கொளுத்திய வட்டாட்சியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

  ராஜஸ்தான் மாநிலம் ஷிரோஹி மாவட்டத்தை சேர்ந்தவர் வட்டாட்சியர் கல்பேஷ் குமார் ஜெயின். காண்ட்ராக்ட் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட கல்பேஷ் குமார் ரூ.1 லட்சம் லஞ்சமாக பெற்றதாக தெரிகிறது. இந்த தகவல் லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்களின் காதுகளுக்கு செல்ல கல்பேஷ் குமார் வீட்டுக்கு விரைந்துள்ளனர். போலீஸாரைக் கண்டதும் வீட்டை உள்பக்கமாக தாழிட்டு வெளியில் இருந்து யாரும் உள்ளே வராமல் செய்துவிட்டார். இதற்கிடையில் வீட்டின் பீரோவில் இருந்து கட்டுகட்டாக பணத்தை எடுத்த கல்பேஷ் குமார் சமயலறைக்கு சென்றுள்ளார். அடுப்பை பற்ற வைத்து பீரோவில் இருந்து கொண்டு வந்த கட்டுகட்டான பணத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார்.

  சமயலறை ஜன்னலில் தீப்பிழம்புகளை பார்த்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது கணவன், மனைவி இருவரும் பணத்தை எரித்துக்கொண்டிருந்தனர். இதனை அதிகாரிகள் வீடியோவாக படம் பிடித்தனர். இதனையடுத்து உள்ளூர் காவலர்களின் உதவியுடன் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்துள்ளனர். அடுப்பில் எரிந்துக்கொண்டிருந்த பணம் அனைத்தும் 500 ரூபாய் கட்டுகளாக இருந்துள்ளது. கல்பேஷ் குமாரின் வீட்டில் இருந்து 1.5 லட்சம் பணத்தை கைப்பற்றியுள்ளனர். இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார் விசாரணைக்காக அழைத்து சென்றனர். 15 முதல் 20 லட்ச ரூபாய் வரையிலான பணத்தை எரித்து இருக்கலாம் என போலீஸார் கூறுகின்றனர். 8 வங்கி கணக்கு பாஸ்புக், அஞ்சல் கணக்கு பாஸ்புக் மற்றும் மேலும் சில ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Ramprasath H
  First published: