ஹோம் /நியூஸ் /இந்தியா /

காதலில் இது புதுசு... மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய டீச்சர்

காதலில் இது புதுசு... மாணவியை திருமணம் செய்ய ஆணாக மாறிய டீச்சர்

ஆரவ்- கல்பனா தம்பதி

ஆரவ்- கல்பனா தம்பதி

“காதலில் எல்லாமே நியாயம் தான்... அதனால்தான் எனது பாலினத்தை ஆணாக மாற்றிக்கொண்டேன்” என்று மீரா கூறுகிறார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியை ஒருவர் தனது மாணவியை திருமணம் செய்வதற்காக ஆணாக மாறிய சம்பவம் நடந்தேறியுள்ளது.

  ராஜஸ்தான் மாநிலம், தீக் நகரில் வசிக்கும் மீரா, நாக்லாவில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார். இவரது மாணவி கல்பனா அதே பள்ளியில் படித்து வந்தார். கல்பனாவை பார்த்ததுமே மீராவுக்கு அவர் மேல் காதல் மலர்ந்துள்ளது.

  இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் பெண் என்பதால் சிக்கலை எதிர்கொண்டனர். இதையடுத்து, தனது பாலினத்தை ஆணாக மாற்றிக்கொள்ள மீரா முடிவு செய்தார். பல்வேறு முயற்சிகளுக்கும் சிகிச்சைகளுக்கும் பின் ஆணாக மாறிய அவர் கடந்த நவம்பர் 4ம் தேதி கல்பனாவை கரம் பிடித்தார். இரு வீட்டாரும் இவர்களது திருமணத்தை ஏற்றுக்கொண்டு விட்டனர்.

  “காதலில் எல்லாமே நியாயம் தான்... அதனால்தான் எனது பாலினத்தை மாற்றிக்கொண்டேன்” என்று மீரா கூறுகிறார். ஆணாக மாறிய் பின்னர், தனது பெயரை ஆரவ் என்று அவர் மாற்றிக்கொண்டார். மேலும், பெண்ணாக பிறந்தாலும் தன்னை ஆணாகவே உணர்ந்ததாகவும் ஆரவ் கூறுகிறார்.

  திருமணம் குறித்து கல்பனா கூறுகையில், “ தொடக்கத்தில் இருந்தே நான் அவரை காதலித்து வந்தேன். ஆணாக மாறுவதற்கான சிகிச்சையை செய்யாமல் இருந்திருந்தாலும் நான் அவரை திருமணம் செய்திருப்பேன்” என்று குறிப்பிடுகிறார். கல்பனா மாநில அளவிலான கபடி வீராங்கனை ஆவர். 2023ம் ஆண்டு துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச கபடி போட்டியிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Couple, Love marriage, Rajasthan