ஹோம் /நியூஸ் /இந்தியா /

பிரச்னை தீர காட்டுக்குள் உடலுறவு.. ஜோடி மீது பெவிகுயிக் பசையை ஊற்றி கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி!

பிரச்னை தீர காட்டுக்குள் உடலுறவு.. ஜோடி மீது பெவிகுயிக் பசையை ஊற்றி கொடூரமாக கொலை செய்த மந்திரவாதி!

கைது செய்யப்பட்ட மந்திரவாதி பாலேஷ் குமார்

கைது செய்யப்பட்ட மந்திரவாதி பாலேஷ் குமார்

ராஜஸ்தான் மாநிலத்தில் திருமணத்தை மீறிய உறவில் இருந்த ஜோடியின் கொலைப் பின்னணியில் ஒரு மந்திரவாதியின் திடுக்கிடும் சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே உள்ள கெலபாவாடி காட்டுப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் நிர்வாணமான நிலையில் நவம்பர் 18ஆம் தேதி கண்டெடுக்கப்பட்டன. இந்த உடல்களை மீட்டு காவல்துறை அடையாளம் கண்டதில் அந்த ஆண் 30 வயதான ராகுல் மீனா என்பதும், பெண் 28 வயதான சோனு குன்வார் என்பது தெரியவந்தது. அரசுப் பள்ளி ஆசிரியரான ராகுலுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் ஆகியுள்ளது. அதேபோல், சோனுவுக்கும் வேறு ஒரு ஆணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

  இந்நிலையில், அப்பகுதியில் உள்ள பாவ்ஜி மந்திர் என்ற கோயிலுக்கு இரு ஜோடியும் வருவது வழக்கம். அப்போது ராகுல் மற்றும் சோனுவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அந்த கோயிலில் பாலேஷ் குமார் என்ற 52 வயது மந்திரவாதி 8 ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவர் அப்பகுதி உள்ளூர் மக்களின் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை தனது தாந்திரீக நடவடிக்கைகள் மூலம் தீர்த்து வைப்பதாகக் கூறி மாந்திரீக நடவடிக்கையை செய்து வந்துள்ளார்.

  இவரிடம் அரசுப் பள்ளி ஆசிரியர் ராகுலின் மனைவி வந்து, கணவர் தன்னிடம் அடிக்கடி சண்டை போடுவதாக முறையிட்டுள்ளார். பாலேஷ் குமாருக்கு ராகுல் மற்றும் சோனுக்கு இடையே உள்ள கள்ள உறவு தெரியவந்துள்ளது. இதை ராகுலின் மனைவியிடம் மந்திரவாதி பாலேஷ் கூறியுள்ளார். இதை அறிந்ததும் ராகுலிடம் அவரின் மனைவி கடுமையாக சண்டைபோட்டுள்ளார். ஆத்திரத்தில் ராகுல் மற்றும் சோனு உண்மையை கூறிய மந்திரவாதி பாலேஷிடம் பதிலுக்கு வந்து சண்டைபோட்டுள்ளனர். மேலும், மந்திரவாதியை பழிவாங்கப் போவதாக மிரட்டியுள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து கோபமடைந்த மந்திரவாதி ராகுல் மற்றும் சோனுவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியுள்ளார்.

  அதன்படி, நவம்பர் 18ஆம் தேதி மாலை, ராகுல் மற்றும் சோனுவை காட்டுப் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார். இருவரும் அங்கு வந்த நிலையில், தான் சொல்லும் படி செய்தால் குடும்பப் பிரச்னை தீர்ந்துவிடும் என்றுள்ளார். அவர்களும் சரி என்றுள்ளனர்.அதன்படி, ராகுல் மற்றும் சோனு இருவரும் அந்த காட்டுப்பகுதியில் தன் முன்னே நிர்வாணமாக உடல் உறவு செய்ய வேண்டும் என்றுள்ளார். அப்படி உடல் உறவு செய்யும் போது ஒரு புனித நீரை தான் தெளிக்கப்போவதாகவும் அதன் பின்னர் பிரச்னை எல்லாம் தீர்ந்து விடும் என்றுக் கூறி இருவரையும் நம்பவைத்துள்ளார். மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு ராகுல் மற்றும் சோனு காட்டுப் பகுதியில் உடல் உறவு செய்யத் தொடங்கியுள்ளனர்.

  இதையும் படிங்க: எய்ட்ஸ் பாதித்த கர்ப்பிணியை தொட மறுத்த மருத்துவர்கள்.. பிரசவித்த சிசு பலியான சோகம்!

  அந்த நேரத்தில் மந்திரவாதி தன்னிடம் இருந்த ப்விக்குயிக்கின் சூப்பர்க்ளூ பசை 50 பாக்கெட்டுகளை பாட்டில் வைத்திருந்தார். அதை உடல் உறவில் இருந்த ராகுல்-சோனு இருவரின் உடல்களிலும் ஊற்றியுள்ளார். பசை ஒட்டிக்கொண்ட நிலையில் இருவராலும் பிரிய முடியவில்லை. பிரிய முயன்றால் சருமத்தின் சதைகள் பிய்யத் தொடங்கியுள்ளது. வலியால் இருவரும் துடித்த நிலையில், ராகுலின் கழுத்தை அறுத்தும் பெண் சோனுவை கத்தியால் குத்தியும் கொலை செய்துவிட்டு மந்திரவாதி தப்பியுள்ளார்.

  இந்த கொடூர கொலையானது காவல்துறையின் 5 நாள் தீவிர விசாரணையில் அம்பலமாகியுள்ளது. 200 பேர் மற்றும் 50 சிசிடிவி கேமாரக்கள் உதவியுடன் காவல்துறை இந்த உண்மையை கண்டறிந்துள்ளது. இதைத் தொடர்ந்து மந்திரவாதி பாலேஷ் குமாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Crime News, Double Murdered, Murder case, Rajasthan