பஞ்சர் கடையில் பேசிக்கொண்டிருந்த இளைஞர்கள் திடீரென தரைப்பகுதி உடைந்ததால் பாதாளத்தில் விழுந்தனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மார் நகரின் பாபா பாவ்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த 7-ம்தேதி நடந்துள்ள அசம்பாவிதம் தற்போது வைரலாகியுள்ளது.
சிரவன் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான பஞ்சர் கடையில் 5 நபர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இதையும் படிங்க - ரசாயன தொழிற்சாலையில் நள்ளிரவில் ரியாக்டர் வெடித்து விபத்து.. 6 தொழிலாளர்கள் பலி, 11 பேர் கவலைக்கிடம் - ஆந்திராவில் சோகம்
இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பகுதிக்கு கீழே சாக்கடை ஓடுகிறது. அதற்கு மேல் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு, அதன் மேல் நின்று கொண்டு பேசுகிறார்கள்.
திடீரென கான்கிரீட் தளத்தில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. இதையடுத்து தொப்பென்று 5 பேரும் பாதாளத்திற்குள் விழுகின்றனர். அவர்களுடன் பைக் ஒன்றும் 5 பேர் மீது விழுகிறது.
இதையும் படிங்க - இப்படியும் நடக்குமா? ராட்சத பல்லியை பாலியல் பலாத்காரம் செய்த 4 பேர் கைது...
இந்த சம்பவத்தில் 5 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து போன்றே இதே பகுதியில் சில அசம்பாவிதங்கள் நடந்திருப்பதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.