ராஜஸ்தானில் பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து பிளாக் மெயில் செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டம் தாதபாடி என்ற பகுதியில் அரசு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இங்கு பேராசிரியராக பணிபுரிபவர் 47 வயதான கிரீஷ் பார்மர்.
இவருக்கு அதே கல்லூரியில் படிக்கும் அர்பித் அகர்வால் என்ற மாணவருடன் நெருக்கமான பழக்கம் கொண்டவர். இவர்கள் இருவரும் சேர்ந்து அந்த பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததது அம்பலமாகியுள்ளது.
இங்கு எலக்ட்ரானிக்ஸ் துறையில் படிக்கும் மாணவி ஒருவர் சமீபத்திய தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்துள்ளார். இந்நிலையில், அந்த மாணவியிடம் மாணவர் அர்பித் நல்ல விதத்தில் தேர்ச்சி பெற பேராசிரியர் கிரீஷை சென்று பார் என ஆலோசனை தந்துள்ளார். மாணவி சந்தேகத்துடன் அதை மறுக்கவே, அர்பித் தொடர்ந்து மாணவிக்கு அழுத்தம் தந்துள்ளார். அத்துடன் பேராசிரியர் கிரீஷ் மாணவர் அர்பித்துடன் தொலைபேசி உரையாடலில் அந்த மாணவி குறித்து ஆபாசமான முறையில் பேசி கமெண்டுகள் செய்துள்ளார்.
இந்த தொலைபேசி உரையாடல்கள் ரெக்கார்ட் ஆகி வெளியே கசித்துள்ளது. இது பல்கலைகழக மாணவர்கள் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையில் பேராசிரியர் கிரீஷ் மற்றும் மாணவர் அர்பித் ஆகியோர் மீது ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் பேராசிரியர் கிரீஷ் மற்றும் மாணவர் அர்பித் ஆகிய இருவரையும் காவல்துறையினர் தாதாபாடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: கணவர் சண்டையை சரிசெய்ய மந்திரவாதி உதவி.. பெண்ணை நரபலி கொடுக்க முயற்சி.. கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி!
மேலும், கைதான பேராசிரியர் இதே போல பல மாணவிகளிடம் அத்துமீறலில் ஈடுபட்டுள்ள விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஆசைக்கு இணங்காத மாணவிகளுக்கு பரிட்சையில் குறைந்த மதிப்பெண் வழங்குவது, பெயில் ஆக்குவது போன்றவற்றை செய்து பிளாக்மெயில் செய்துள்ளதாக அடுக்காடுக்கான புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. கைதான இருவர் மீதும் இபிகோ 354D, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: College, Rajasthan, Sexual abuse, Sexual harassment