ஹோம் /நியூஸ் /இந்தியா /

80 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா? - ராஜஸ்தானில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம்!

80 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் திடீர் ராஜினாமா? - ராஜஸ்தானில் மீண்டும் உச்சக்கட்ட குழப்பம்!

அசோக் கெலாட்டுன் சச்சின் பைலட்

அசோக் கெலாட்டுன் சச்சின் பைலட்

ராஜஸ்தான் மாநிலத்தில் சச்சின் பைலட்டிற்கு எதிராக சுமார் 80 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் அங்கு உச்சகட்ட அரசியல் குழப்பம் உருவாகியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Rajasthan, India

  ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் உச்சகட்ட குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அக்கட்சியின் 80க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சட்டப்பேரவை சபாநாயகர் சிபி ஜோஷியை சந்தித்து தனது ராஜினாமா கொடுத்துள்ளனர்.

  அக்கட்சியின் இளம் தலைவரான சச்சின் பைலட்டை முதலமைச்சராக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த எம்எல்ஏக்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

  குழப்பத்தின் பின்னணி

  வரும் அக்டோபர் மாதம் காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் அக்டோபர் 17ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பதிவான வாக்குகள் அக்டோபர் 19ஆம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவு அறிவிக்கப்படவுள்ளது.

  இந்த தேர்தலில் போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மூத்த தலைவரும் ராஜஸ்தான் மாநில முதலமைச்சருமான அசோக் கெலாட் அறிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவராக அசோக் கெலாட் தேர்வாகும் பட்சத்தில் முதலமைச்சர் பதவியில் ராஜஸ்தானின் அடுத்த முதமைலச்சராக சச்சின் பைலட் தேர்வு செய்ய காங்கிரஸ் மேலிடம் நகர்வுகள் மேற்கொண்டுவருகிறது. இதை சச்சின் பைலட் ஆதரவாளர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு அசோக் கெலாட் ஆதரவாளர்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

  இதையும் படிங்க: பாஜகாவை வீழ்த்த அதிரடி வியூகம் ? - சோனியாவை சந்தித்த நிதீஷ்குமார், லாலுபிரசாத் யாதவ்...!

  கையறு நிலையில் மேலிட பொறுப்பாளர்கள்

  நிலைமையை சீர் செய்ய ராஜஸ்தான் விரைந்த காங்கிரஸ் மேலிடத் பொறுப்பாளர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாகான் ஆகியோரை அதிருப்தி எம்எல்ஏக்கள் சந்திக்க மறுத்துள்ளனர்.  இதைத் தொடர்ந்து நிலைமை குறித்து சோனியா காந்தியிடம் அறிக்கை சமர்ப்பிக்க மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மாகான் மீண்டும் டெல்லி திரும்பியுள்ளனர். சச்சின் பைல்ட் மற்றும் அவருக்கு ஆதரவு தரப்பு யாரையும் முதலமைச்சராக்க கூடாது என அசோக் கெலாட் தரப்பு எம்எல்ஏக்கள் விடாபிடியாக இருப்பதால் ராஜஸ்தான் அரசியல் குழப்பம் தற்போது உச்சத்தில் உள்ளது.

  Published by:Kannan V
  First published:

  Tags: Congress party, Rajasthan, Sachin pilot