அசோக் கெலாட் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்? காங். வெளியிட்ட பரபரப்பு ஆடியோ

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பேரம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அசோக் கெலாட் அரசை கவிழ்க்க மத்திய அமைச்சர் பேரம்? காங். வெளியிட்ட பரபரப்பு ஆடியோ
முதலமைச்சர் அசோக் கெலாட்
  • News18
  • Last Updated: July 17, 2020, 1:24 PM IST
  • Share this:
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் உட்பட 19 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் சபாநாயகரிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மாவிடம் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத், பாஜக தலைவர் சஞ்சய் ஜெயின் ஆகியோர் பேரம் பேசியதாக ஆடியோ நேற்று வெளியானது. இதுதொடர்பாக, ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பன்வர் லால் சர்மா, விஸ்வேந்தர சிங் ஆகியோரை காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியிருப்பதாக தெரிவித்தார்.

மாநில அரசை கவிழ்க்கும் சதியில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் மீது வழக்கு பதிவு செய்து உடனே கைதுசெய்ய வேண்டும், அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் வழங்க கருப்பு பணம் எங்கிருந்து வந்தது என விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.





படிக்க: போதை மருந்து கடத்தல்காரரை விடுவிக்க முதல்வர் தரப்பில் இருந்து அழுத்தம் - மாநிலத்தையே அதிர வைத்த பெண் காவல் அதிகாரி

படிக்க: பிளாஸ்மா தானம் அளிப்பவர்களுக்கு வேலைவாய்ப்பு நேர்காணல்களில் முன்னுரிமை..


ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல; எந்த விசாரணைக்கும் தயார் என்று மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத் கூறியுள்ளார்.

இதற்கிடையே, தகுதிநீக்கம் செய்வது தொடர்பாக விளக்கம் கேட்டு சபாநாயகர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கு அம்மாநில உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

 
First published: July 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading