ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: இன்று மீண்டும் கூடுகிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம்..

ராஜஸ்தானில் இன்று மீண்டும் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ராஜஸ்தானில் நீடிக்கும் அரசியல் குழப்பம்: இன்று மீண்டும் கூடுகிறது காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களின் ஆலோசனை கூட்டம்..
முதலமைச்சர் அசோக் கெலாட்
  • Share this:
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியதால் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. ஆட்சியை தக்க வைப்பதற்காக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் அஜய் மக்கான், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா ஆகியோர் ஜெய்ப்பூரில் முகாமிட்டு சச்சின் பைலட் தரப்பை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட்டின் இல்லத்தில் நேற்று காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற எம்.எல்.ஏக்கள் அனைவரும் அசோக் கெலாட்டிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

அதேநேரம், இந்த கூட்டத்தை புறக்கணித்த சச்சின் பைலட் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 15 பேருடன் ஹரியானாவில் உள்ள விடுதியில் ஆலோசனை மேற்கொண்டார். ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் அமர்ந்திருப்பதை போன்ற வீடியோவையும் அவர் வெளியிட்டிருந்தார்.


மேலும் படிக்க...

இசைச் சக்கரவர்த்தி எம்.எஸ்.விஸ்வநாதனின் இசைவாழ்வு: 5-ஆம் ஆண்டு நினைவஞ்சலி இன்று..

இந்திய-சீன ராணுவ தளபதிகளுக்கு இடையில் இன்று பேச்சுவார்த்தை..இந்நிலையில், இரண்டாவது நாளாக இன்று ஜெய்ப்பூரில் உள்ள பேரமண்ட் நட்சத்திர ஹோட்டலில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி சச்சின் பைலட் உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டபோதும், அவர்கள் பங்கேற்கவில்லை.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading