ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி?- பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாக பாஜக பிரமுகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க சதி?- பாஜக பிரமுகர்கள் இருவர் கைது..
முதலமைச்சர் அசோக் கெலாட்
  • Share this:
மத்திய பிரதேசத்தை போன்று ராஜஸ்தானில் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், ராஜஸ்தானில் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேரம் பேசியதாக பாஜகவை சேர்ந்த அசோக் சிங், பாரத் மலானி ஆகியோரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

இதேபோன்று மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பதற்காக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுயேச்சை எம்.எல்.ஏக்கள் மூன்று பேரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலமே கொரோனா தொற்றுக்கு எதிராக போராடி வரும் நிலையில், பாஜக மனிதநேயமின்றி ஆட்சியை கவிழ்க்க சதி செய்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.


மேலும் படிக்க...

ஆந்திராவில் காதலனுக்கு செல்ஃபி வீடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்..

பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவால் தங்களது ஆட்சியை பொறுத்துக் கொள்ள முடியாவிட்டாலும், காங்கிரஸ் கட்சி 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்யும் என்று அசோக் கெலாட் உறுதிபடக் கூறினார்.
First published: July 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading