Home /News /national /

தடயத்தை தூக்கிக்கொண்டு ஓடிப்போன குரங்கு - திணறிப்போன காவலர்கள்

தடயத்தை தூக்கிக்கொண்டு ஓடிப்போன குரங்கு - திணறிப்போன காவலர்கள்

கோப்பு படம்

கோப்பு படம்

தடயங்களை கையாண்ட காவலர் சஸ்பென்ட் செய்யப்பட்டு, பின்னர் ஓய்வு பெற்ற நிலையில், அவர் தற்போது உயிருடனே என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

    ராஜஸ்தானில் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜரான காவல்துறையினர் தாங்கள் சேகரித்து வைத்திருந்த தடயங்களை குரங்கு எடுத்துச் சென்றுவிட்டதாக கூறிய விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது.

    2016ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் சந்தாவாஜி பகுதியைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சசிகாந்த் சர்மா என்ற நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து அந்த நபரின் உறவினர்கள் ஜெய்பூர்-டெல்லி நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என போராடியுள்ளனர். இதைத் தொடர்ந்து காவல்துறை நடத்திய விசாரணை பேரில் ராகுல் மற்றும் மோகன்லால் ஆகிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    இந்த கொலை சம்பவம் தொடர்பாக இருவரையும் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்நிலையில் வழக்கு விசாரணை பல கட்டங்களாக பல ஆண்டுகள் கடந்த சென்ற நிலையில், இறுதி விசாரணையில் நீதிமன்றம் கொலைக் குற்றத்திற்கான தடயங்களை சமர்பிக்க கோரியுள்ளது.

    அப்போதுதான் நீதிமன்றமே அதிர்ச்சியடையும் விதமான பதிலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒரு முறை கொலை சம்பவத்திற்கு தொடர்புடைய கத்தி உள்ளிட்ட 15 தடயங்கள் கொண்ட பையை நீதிமன்றத்திற்கு வெளியே உள்ள மரத்தின் கீழ் காவலர் வைத்துள்ளார். அப்போது அந்த பையை குரங்கு ஒன்று எடுத்துச் சென்று ஓடிவிட்டது. இதனால் செய்வதறியாது திகைத்து நின்றுள்ள காவல்துறை தற்போது நீதிமன்றம் கேட்டவுடன் இந்த பதிலை எழுத்துப் பூர்வமாக அளித்துள்ளது. காவல்துறையின் பதில் காரணமாக கோபமடைந்த நீதிமன்றம் இதை கையாண்ட காவலருக்கு நோட்டீஸ் அனுப்புவதாக கூறியது. அதற்கு பதிலளித்த காவல்துறை, சம்பந்தப்பட்ட காவலர் சஸ்பென்ட் ஆகி, பின்னர் ஓய்வு பெற்று சில வருடங்கள் ஆன நிலையில்,அவர் உயிருடனே இல்லை என்றுள்ளது.

    இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் கவலை இல்லை - 10 மணி நேரம் இயங்கும் பேட்டரி ட்ராக்டரை வடிவமைத்து அசத்திய இளம் விவசாயி

    பொது மனிதர்கள்தான் தாங்கள் செய்யும் குற்றத்தின் தடயங்களை அழிப்பது வழக்கம். ஆனால், ராஜஸ்தானில் குரங்கு ஒன்று கொலைக்குற்றம் செய்தவர்களின் தடயத்தை அழித்த விசித்திர நிகழ்வு நடைபெற்றுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Monkey, Rajasthan

    அடுத்த செய்தி