Home /News /national /

25 வயது பழங்குடி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காவலர் கைது

25 வயது பழங்குடி பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய காவலர் கைது

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

ஓய்வு பெற ஓராண்டே உள்ள நிலையில், குற்றச் செயலில் ஈடுபட்ட காவலரை சஸ்பென்ட் செய்த காவல்துறை அவருக்கான ஓய்வூதிய சலுகைகளை ரத்து செய்துள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 25 வயது பழங்குடி பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பாட்லா காவல் நிலையத்தில் பணியாற்றி வருபவர் ஜக்தீஷ் பிரசாத். 59 வயதான ஜக்தீஷ் பிரசாத் துணை ஆய்வாளாராக உள்ள நிலையில், இன்னும் ஓராண்டில் ஓய்வு பெறவுள்ளார்.

    இந்நிலையில், இவர் மீது பாலியல் புகார் எழுந்துள்ள நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோனிகா சென் இவரை வேலையில் இருந்து சஸ்பென்ட் செய்து, பின்னர் கைது செய்துள்ளனர். அத்துடன் ஓய்வுக்குப் பின் அனைத்து சலுகைகளையும் ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக ராஜஸ்தான் காவல்துறை கூறியதாவது, அப்பகுதியைச் சேர்ந்த 25 வயது பழங்குடி பெண்ணுக்கு காவலர் பிரசாத் தொடர்ந்து தொல்லை அளித்து வந்துள்ளார். கடந்த திங்கள் கிழமை அன்று அப்பெண் திருமணம் ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது அங்கு சென்ற பிரசாத் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக பிடித்து அங்குள்ள காட்டுப் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அந்த இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த காவலர், மீண்டும் அப்பெண்ணை திருமணம் நடக்கும் இடத்திலேயே கொண்டு வந்து விட்டுள்ளார். தனக்கு நேர்ந்த அவலத்தை தனது கணவரிடம் அப்பெண் கூறியுள்ளார்.

    இதையும் படிங்க: அதிக ஆம்புலன்ஸ் கட்டணம்: மகள் உடலை மோட்டார் சைக்கிளிலேயே எடுத்து சென்ற தந்தை

    இதையடுத்து அதே காவல்நிலையத்தில் அப்பெண்ணின் கணவர் புகார் அளித்த நிலையில், பாலியல் வன்கொடுமை மற்றும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்ட காவலர் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
    Published by:Kannan V
    First published:

    Tags: Police arrested, Rajasthan, Rape case

    அடுத்த செய்தி