Home /News /national /

மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மாமியார்!

மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக கொடுத்த மாமியார்!

கனிதேவி, சோனிகா,

கனிதேவி, சோனிகா,

  • News18
  • Last Updated :
    ராஜஸ்தான் மாநிலத்தில், 60 வயது பெண் ஒருவர் தனது மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தானின் ஜெய்சால்மர் நகரை சேர்ந்தவர் சோனிகா (32). இவர் தனது கணவர் மற்றும் மாமியார் கனிதேவி (60) ஆகியோருடன் அதே நகரில்  வசித்து வந்தார். கடந்த ஓராண்டாக சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட சோனிகா தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அவரது சிறுநீரகங்கள் செயலிழந்து போயின.

    இதையடுத்து, அவரது உடல்நிலை மோசமடைந்தது. சோனிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடனடியாக சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    மேலும், சிறுநீரகத்தை தானம் செய்யும் நபரின் ரத்த வகை சோனிகாவின் ரத்த வகையுடன் ஒத்துப்போக வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறுநீரகத்தை தானம் செய்ய முடியுமா? என்று சோனிகாவின் தாய், தந்தை மற்றும் சகோதரனிடம் கேட்கப்பட்டது. இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில் தனது மருமகளின் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்த கனிதேவி, சோனிகாவுக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய சம்மதித்தார். இருவரது ரத்த வகையும் ஒத்துப்போகவே, கனிதேவியின் சிறுநீரகம் சோனிகாவுக்கு பொருத்தப்பட்டது. தற்போது, இருவரும் நலமாக உள்ளனர்.

    பெற்ற தாயே தனது மகளுக்கு சிறுநீரகத்தை தானம் செய்ய மறுத்துவிட்ட நிலையில், மருமகளுக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த மாமியாரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
    Published by:DS Gopinath
    First published:

    Tags: Daughter-in-law, Donate kidney, Gani Devi, Kidney, Mother-in-law, Rajasthan, Sonika

    அடுத்த செய்தி