முகப்பு /செய்தி /இந்தியா / ரூ.500, ரூ.2000 நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கவேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!

ரூ.500, ரூ.2000 நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கவேண்டும்: பிரதமருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ கோரிக்கை!

ரூபாய் நோட்டு

ரூபாய் நோட்டு

500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் ஊழல்கள் அதிகம் நிகழ்வதாகவும், மதுக்கூடங்களில் இந்த நோட்டுக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நோட்டுகளில் காந்தியின் படத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

ராஜஸ்தான்மாநிலத்த்தின் சங்கோட் பகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான பரத் சிங் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் இருந்து மகாத்மா காந்தியின் படத்தை நீக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  இந்த நோட்டுகளில்தான் ஊழல்கள் அதிகம் நிகழ்வதாகவும், மதுக்கூடங்களில் இந்த நோட்டுக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதாகவும் அதன் காரணமாக இந்த நோட்டுகளில் காந்தியின் படத்தை நீக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

10 ரூபாய், 20 ரூபாய், 50 ரூபாய், 100 ரூபாய் மற்றும் 200 ரூபாய்களில் காந்தியின் புகைப்படம் இருக்கட்டும் என்றும் அவற்றை ஏழைகள் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ள பரத் சிங், ஏழைகளை உயர்த்த தனது வாழ்க்கை காந்தி அர்ப்பணித்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் காந்தியின் கண்ணாடியை மட்டும் பயன்படுத்தினால் போதும் என்றும் அசோக சக்கரத்தையும் பயன்படுத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்துள்ளார். ஊழல்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வருவதன் மூலம் கவனம் ஈர்த்தவர் பரத் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் நோட்டுகளில் பல்வேறு தலைவர்களின் புகைப்படங்களை சேர்க்க கூறி கோரிக்கை எழுவது அவ்வப்போது நிகழ்வதாகும். இந்து மதக் கடவுளான லட்சுமியின் படத்தை ரூபாய் தாள்களில் அச்சிட்டால் இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று கடந்த ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியது நினைவுக்கூரதக்கது.

மேலும் படிங்க: பழைய வாகனங்களை அழிப்பவர்களுக்கு சலுகைகள்: மத்திய அரசு அறிவிப்பு

First published:

Tags: Indian Rupee, Mahatma Gandhi, Rajastan