ஹோம் /நியூஸ் /இந்தியா /

விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்!

விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்!

விநோத நோயால் பாதிப்பு

விநோத நோயால் பாதிப்பு

தொடக்கத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை தூக்கத்தில் இருந்த புர்காரம் தற்போது 20- முதல் 25 நாட்கள் வரை தூங்குவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.  அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனைப் படுகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

விநோத நோயால் கும்பகர்ணன் ஆன நபர்... வருஷத்தில் 300 நாள் தூங்கியே கழிக்கிறார்ராஜஸ்தானைச் சேர்ந்த நபர் ஒருவர் வருசத்தில் 300 நாட்களுக்கு தூங்கும் வகையில் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராஜஸ்தானின்மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம்.  42 வயதாகும் இவர்  Axis Hypersomnia (ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா) என்னும் விநோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.  இந்த நோயின் காரணமாக வருடத்தில் 300 நாட்கள் வரை அவர் தூக்கத்திலேயே உள்ளார்.  23 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நோயின் தாக்குதலுக்கு புர்காரம் உள்ளானார்.  நோயின் காரணமாக,  தூக்கத்தில் விழுந்தார் என்றால் சுமார் 25 நாட்களுக்கு வரை அவர் எழுந்திரிக்க மாட்டார். இதனால் உள்ளூர் மக்கள் அவரை கும்பகர்ணன் என்று அழைக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நாகூரில் உள்ள பத்வா கிராமத்தில் வசிக்கும் புர்காரம், அங்கு பலசரக்கு கடையை நடத்தி வருகிறார்.  இந்த விநோத நோய் காரணமாக மாதத்தில் 5 நாட்கள் மட்டுமே அவர் கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்கிறார்.  தொடக்கத்தில் 5 முதல் 7 நாட்கள் வரை தூக்கத்தில் இருந்த புர்காரம் தற்போது 20- முதல் 25 நாட்கள் வரை தூங்குவதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.  அவரை எழுப்புவதற்கு பெரும்பாடு பட வேண்டியுள்ளதாகவும் அவர்கள் வேதனைப் படுகின்றனர்.

மேலும் படிக்க: விழிப்புணர்வு ஏற்படுத்த பழங்குடி மக்களுடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட தமிழிசை சௌந்தரராஜன்!

ஆரம்பத்தில் இத்தகைய நோயால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதை மருத்துவர்கள் அறியவில்லை. அவர் தூங்கும் நாட்கள் அதிகரிக்கவேதான் மருத்துவர்கள் இந்த நோயை கண்டறிந்தனர்.  இது விநோதமான நோய் என்று கூறும் மருத்துவர்கள், ஒரு நபர் தூக்கத்தில் இருந்து எழ முயன்றாலும் அவரது உடல் ஒத்துழைப்பை தராது என்று தெரிவிக்கின்றனர்.  தூங்குவதற்கு ஒருநாள் முன்பு அவர் கடுமையான தலைவலியால் பாதிக்கப்படுவார்.

இதையும் படிங்க: நீட் தேர்வு தேதி அறிவிப்பு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

தூக்கத்தில் இருந்து அவர் எழுந்திருக்க மாட்டார் என்பதால்,  தூக்கத்தில் இருக்கும்போதே அவருக்கு உறவினர்கள் உணவு ஊட்டுகின்றனர்.  புர்காரமின் நோயை குணப்படுத்த முடியாது என்றபோதிலும்  விரைவில் அவர் நலம் பெறுவார் என அவரது தாயாரும் மனைவியும் நம்பி வருகின்றனர்.

First published:

Tags: Rajastan