திருமணம் செய்து வைத்த மகள் காதலுடனுடன் சென்ற விரக்தியில் பெற்ற மகளையே துடிதுடிக்க தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் தவுசா மாவட்டத்தைச் சேர்ந்த காய்கறி வியாபாரியான சங்கர் லால் என்பவரின் தனது 19 வயது மகள் பிங்கி சைனியை கொலை செய்துவிட்டதாக கோத்வாலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த காவல்துறையினர் விசாரித்த போது தான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இது கவுரவக் கொலை என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
சங்கர் லாலின் மகள் பிங்கி சைனிக்கு அவரது விருப்பம் இல்லாமலே கடந்த பிப்ரவரி 16ம் தேதியன்று அவரின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் திருமணம் நடந்த மூன்றே நாட்களில் தனது பெற்றோரின் வீட்டுக்கே திரும்பி வந்த அவரின் மகள் அவருடைய காதலனான ரோஷன் மஹாவர் (வயது 23) என்பவருடன் தப்பிச் சென்றார். ரோஷன் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவரை காதலிப்பதை அறிந்து சங்கர் லால் அவரின் மகளுக்கு வேறு நபருடன் உடனடியாக திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் தங்களின் பெற்றோர் தங்களை ஏதேனும் செய்து விடுவர் என பிங்கி சைனி முறையிட்டார். நீதிமன்றமும் அவரின் பெற்றோரை வரவழைத்து விபரீத நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என அறிவுறுத்தியது. இதனையடுத்து ரோஷனுடன் சென்ற பிங்கியை கடந்த மார்ச் 1ம் தேதி சங்கர் லால் மற்றும் அவரின் உறவினர்கள் 10க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கடத்தி தங்கள் வீட்டுக்கு கொண்டு வந்ததாக தெரியவருகிறது. இதன் பின்னர் மகளை சங்கர் லால் கொடூரமான வெட்டி படுகொலை செய்த தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
கவுரவக் கொலை என சந்தேகத்துடன் சங்கர் லால் மீது கொலை வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர். இதனிடையே தந்தையே மகளை கவுரவத்துக்காக கொலை செய்த தகவல் காட்டுத்தீயாய் பரவியதுடன், சில சமூக அமைப்புகள் இச்சம்பவத்திற்கு வேதனை தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Honour killing, Rajasthan