35 ஆண்டுகளுக்கு பின் பிறந்த பெண் குழந்தையை தாய் வீட்டிலிருந்து ஹெலிகாப்டரில் அழைத்து வந்த தந்தை..

குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த போது...

35 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற குழந்தையை மாமியார் வீட்டிலிருந்து ராஜ மரியாதையுடன் ஹெலிகாப்டர் வைத்து அழைத்து வந்து பரவசம் அடைந்துள்ளார் தந்தை ஒருவர்.

  • Share this:
ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டத்தில் உள்ளது நிம்தி சந்தவாதா எனும் கிராமத்தைச் சேர்ந்த ஹனுமன் பிரஜாபத் - சுக்கி தேவி தம்பதியருக்கு திருமனம் ஆகி 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக கடந்த மார்ச் 3ம் தேதி குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலம் கழித்து குழந்தை பிறந்ததால் ஹனுமன் பிரஜாபத் மிகுந்த சந்தோசத்தில் இருந்துள்ளார். குழந்தைக்கு ரியா என பெயரிட்டிருக்கிறார் அவர்.

பொதுவாக குழந்தை பிறந்தால் சில காலம் தாய் வீட்டில் வைத்து பராமரிப்பார்கள், இதன் காரணமாக நாகவுர் மாவட்ட மருத்துவமனையில் பிறந்த குழந்தையை ஹர்சோலாவில் உள்ள சுக்கி தேவியின் தாய் வீட்டிற்கு அழைத்துச் சென்று பராமரித்து வந்துள்ளனர்.

தன்னுடைய மனைவி மற்றும் குழந்தை ரியாவை தாய் வீட்டிலிருந்து அழைத்து வருவதற்காக ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு எடுத்த ஹனுமன் பிரஜாபத், தனது உறவினர்களுடன் சுக்கி தேவியின் வீட்டிற்கு சென்று குழந்தையையும், மனைவியையும் அழைத்து வந்து ஊரையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு ஹனுமன் பிரஜாபத் அளித்துள்ள பேட்டியில், “என் மகள், என் இளவரசியின் வருகையை நாங்கள் மிகவும் சிறப்பானதாக மாற்ற விரும்பினோம், இதன் மூலம் என் மகள் எனக்கும் எனது குடும்பத்திற்கும் எவ்வளவு சிறப்பு வாய்ந்தவள் என்பதை காட்ட நான் இப்படிச் செய்தேன்” என ஹெலிகாப்டர் ஏற்பாடு குறித்து கூறினார் அவர்.நிம்தி சந்தவாதா மற்றும் ஹர்சோலா கிராமங்களுக்கு இடையிலான தூரம் 40 கிமீ. இந்த தொலைவை ஹெலிகாப்டரில் 10 நிமிடத்தில் கடந்து வந்துள்ளனர். நிம்தி சந்தவாதா கிராமத்தில் இருந்து தனது உறவினர்கள் மூவருடன் புறப்பட்டு சென்ற ஹனுமன் பிரஜாபத், ஹர்சோலா கிராமத்தில் 2 மணி நேரம் இருந்துள்ளார். பின்னர் தனது மனைவி சுக்கி தேவி, குழந்தை ரியா, உறவினர்களுடன் ஹெலிகாப்டரில் புறப்பட்டு தந்து கிராமத்திற்கு திரும்பியுள்ளார்.

ஹெலிகாப்டரில் எனது குழந்தையை அழைத்து வரும் யோசனையை எனது தந்தை தான் முதலில் தெரிவித்ததாக கூறும் ஹனுமன் பிரஜாபத், எனக்கு குழந்தை பிறந்ததில் எனது தந்தை மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர் தான் ஹெலிகாப்டரில் குழந்தையை அழைத்து வருமாறு கூறியதாக தெரிவித்தார்.

35 ஆண்டுகளுக்கு பின்னர் எங்கள் குடும்பத்திற்கு குட்டி தேவதை பிறந்திருக்கிறாள். அவளின் கனவுகளை நாங்கள் பூர்த்தி செய்வோம் என குழந்தையின் தாத்தாவும் ஹனுமன் பிரஜாபத்தின் தந்தையுமான மதன்லால் தெரிவித்தார்.
Published by:Arun
First published: