• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடித்த தந்தை.. ராஜஸ்தானில் நடந்த கொடூரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

8 வயது சிறுவனை அவனது தந்தை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பாக அறிக்கை சமர்பிக்க மாவட்ட எஸ்.பி.க்கு மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு.

  • Share this:
    ஆத்திரத்தில் மகனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு தந்தை அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் 8 வயது சிறுவனை அவனது தந்தை வீட்டில் தலைகீழாக தொங்கவிட்டு அடிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. ராஜஸ்தான் மாநிலம் தாபி பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பள்ளியில் கொடுத்த வீட்டு பாடங்களை 8வயது சிறுவன் செய்யாததால் அவனது தந்தை இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. சிறுவனை தலைகீழாக கட்ட அவனது தாயும் உதவி செய்துள்ளார். அந்த நபர் சிறுவனின் கை மற்றும் கால்களை கட்டி வீட்டில் உள்ள சீலிங் பேனில் தலைகீழாக தொங்கவிட்டுள்ளார். சிறுவன் தன்னை விட்டுவிடும்படி கெஞ்சுகிறான். அதன்பின் குச்சியை கொண்டு சிறுவனை தாக்குகிறார்.

    Also Read: ஓடும் ரயிலில் விபரீத சாகசம்.. பள்ளி மாணவியை நேரில் அழைத்து திருவள்ளூர் எஸ்.பி அறிவுரை

    அப்போது சிறுவனின் தாய் குறுக்கிட்டு அடிக்க வேண்டாம் எனக் கூறுகிறார். இந்த வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் நவம்பர் 17-ம் தேதி நடந்துள்ளது.கடந்த சில தினங்களுக்கு முன் அந்தப்பெண் தனது சகோதரன் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது இந்த வீடியோவை தனது சகோதரனிடம் காண்பித்து அவர் செய்யும் கொடுமைகளை கூறியுள்ளார்.

    இதனையடுத்து அவர் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய சிறுவனின் மாமா, சிறுவனின் தந்தை எப்போதும் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டிருப்பார் என்றும் அவரது 5 வயது மகளையும் இப்படித்தான் கொடுமை படுத்துவார் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து எந்தப்புகாரும் தெரிவிக்கவில்லை.

    Also Read: பென்சில் திருடிய சக மாணவன்.. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று புகார் கொடுத்த 2ம் வகுப்பு சிறுவன்!

    சிறுவனின் தந்தையின் முரட்டு சுபாவம் காரணமாக புகார் அளிக்க அவரது குடும்பத்தினர் அஞ்சுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  இந்த விவகாரத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து மூன்று நாள்களுக்கு அறிக்கை சமர்பிக்க மாவட்ட எஸ்.பி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: