ஹோம் /நியூஸ் /இந்தியா /

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை... போலீஸில் புகார் அளித்த தந்தை

மருமகனுடன் ஓட்டம் பிடித்த மாமியார்.. கேள்விக்குறியான மகளின் வாழ்க்கை... போலீஸில் புகார் அளித்த தந்தை

மாதிரி படம்

மாதிரி படம்

Rajasthan illegal affair | திருமணம் முடிந்த பிறகு மகளும், மருமகனும் அடிக்கடி வீட்டிற்கு வந்த போது மருமகனுக்கும், மாமியாருக்கும் காதல் மலர்ந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Rajasthan, India

ராஜஸ்தானில் மருமகனுடன் ஓட்டம் பிடித்த மனைவியை மீட்டு தர வேண்டும் என கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிரோகி மாவட்டத்தில் உள்ளது சியாகாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு 3 மகள்கள் உள்ளனர். ரமேஷ் தன்னுடைய மூத்த மகள் கிஷ்ணாவை நாராயணன் ஜோகி என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

நாராயணன் ஜோகி, தன்னுடைய புது மனைவியுடன், மாமியார் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற போது, மாமியாருக்கும் மருமகனுக்கும் இடையே திடீரென காதல் பற்றிக் கொண்டது. இந்த காதல் ஒரு கட்டத்திற்கு மேல் கள்ளக்காதலாக மலர்ந்தது. இருவரும் பிரிந்து வாழ முடியாத நிலைக்கு சென்றதால், புத்தாண்டில் புது வாழ்க்கையை தொடங்கலாம் என 1ஆம் தேதி விடியற்காலையில் வீட்டை விட்டு இருவரும் ஓடியுள்ளனர்.

விடிந்ததும் எழுந்த ரமேஷ், மனைவியும், மருமகனையும் காணவில்லை என்பதை அறிந்து போலீசில் புகார் அளித்தார். அதில், கடந்த டிசம்பர் மாதம் 30ஆம் தேதி மருமகன் தனியாக வீட்டிற்கு வந்ததாகவும், இருவரும் சேர்ந்து மது அருந்தியதாகவும் தெரிவித்தார். மது போதையில் தான் மயங்கிய பிறகு இருவரும் ஓடியதாக கூறிய அவர், தன் மனைவியை மீட்டு தாருங்கள் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மாமியார் மருமகனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

First published:

Tags: Crime News, Illegal affair, Rajasthan