கூட்டுறவுச் சங்க மோசடி வழக்கு: மத்திய அமைச்சர் ஷெகாவத்துக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்

கூட்டுறவுச் சங்க மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட 17 பேருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 • Share this:
  கூட்டுறவுச் சங்க மோசடி வழக்கில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உட்பட 17 பேருக்கு ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

  ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அவரது மனைவி மற்றும் 17 பேர் சேர்ந்து மோசடியில் ஏற்பட்டதாக ஏகப்பட்ட புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தன.

  சுமார் ரூ.900 கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இவர்களுக்கு எதிராக சஞ்சீவனி கூட்டுறவு சங்கத்தில் முதலீடு செய்தோர் சங்கம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.

  பணத்தைப் பறிகொடுத்தோருக்கு நீதி வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை புதனன்று ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி விஜய் விஷ்னோய் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மதுசூதன் புரோஹித் கூறும்போது, “கூட்டுறவுச் சங்கத் தலைவர் விக்ரம் சிங், முன்னாள் உறுப்பினரும் மத்திய அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் உள்ளிட்டோர் போலி ஆவணங்களைக் காட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றி விட்டனர்.

  இந்த வழக்கை சிபிஐ, அமலாக்கப்பிரிவினர் உள்ளிட்ட மத்திய புலனாய்வு முகமைகள் விசாரிக்க வேண்டும், பாதிக்கப்பட்டோரின் பணம் வட்டி, அசலுடன் மீட்கப்பட வேண்டும்.

  இதனையடுத்து நீதிமன்ற அமர்வு மத்திய அமைச்சர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 17 பேருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

  வழக்கு விசாரணை ஜனவரி 3ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
  Published by:Muthukumar
  First published: