Home /News /national /

ஓமைக்ரானால் இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - ஒரே நாளில் அடுத்த அதிர்ச்சி

ஓமைக்ரானால் இந்தியாவில் மேலும் ஒருவர் பலி - ஒரே நாளில் அடுத்த அதிர்ச்சி

Omicron

Omicron

இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால்  பலி ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    ஓமைக்ரான் தொற்றால் ஏற்கனவே மகாராஷ்டிராவில் ஒருவர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒருவர் பலியாகி இருப்பது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

    சில வாரங்களுக்கு முன்னர் தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் எனும் உருமாற்றம் அடைந்த புதிய கோவிட் வேரியண்ட் மிக ஆபத்தான வேகத்தில் உலக நாடுகளில் பரவத் தொடங்கியது. இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமைக்ரான் தொற்று பரவியுள்ளது. பரவிய வேகத்தில் சுனாமி போன்ற பாதிப்புகளையும் அது ஏற்படுத்திவிடும் என உலக சுகாதார அமைப்பினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

    இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த 24 மணி நேரத்தில் 16,764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 23 மாநிலங்களில் 1,270 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 125 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலத்தில் 450 பேருக்கு ஓமைக்ரான் உறுதியாகியிருக்கிறது. டெல்லியில் 320 பேருக்கும், கேரளாவில் 109 பேருக்கும், குஜராத்தில் 97 பேருக்கும், ராஜஸ்தானில் 69 பேருக்கும், தமிழகத்தில் 46 பேருக்கும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    Also read:  உலகிலேயே முதல் முறையாக கைகளால் இல்லாமல் மூளையின் சிக்னலால் ட்வீட் செய்த மனிதர்!

    இந்நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால் முதல் முறையாக உயிரிழப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம் பிம்பிரி சின்வாட் பகுதியைச் சேர்ந்த 52 வயதாகும் நபர் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நைஜீரியாவில் இருந்து நாடு திரும்பிய அந்த நபர் ஒய்.பி.சவான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் தற்போது மேலும் ஒரு ஓமைக்ரான் மரணம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது.

    Also read:  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முக்கிய முடிவு

    ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் 73 வயது நபர், இந்த மாத தொடக்கத்தில் ஓமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்து கடந்த டிசம்பர் 21ம் தேதியன்று வீட்டுக்கு திரும்பிய நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இரண்டு தவனை தடுப்பூசிகளும் எடுத்துக் கொண்ட அவருக்கு தற்போது தான் முதல் முறையாக கொரோனா தொற்று பாதித்திருந்தது தெரியவந்துள்ளது.

    Also read:  இந்தியாவில் ஓமைக்ரான் பாதித்த நபர் மாரடைப்பால் மரணம்...

    நேற்று அவரின் உடல்நிலை திடீரென மோசமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வெண்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் அளவு குறைந்து அவர் இன்று மரணத்தை தழுவியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவருக்கு சர்க்கரை நோய் போன்ற இணை நோய்கள் இருந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர்.

    இதுவரை இந்தியாவில் ஓமைக்ரான் தொற்றால்  பலி ஏற்படாமல் இருந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
    Published by:Arun
    First published:

    Tags: Omicron

    அடுத்த செய்தி