Home /News /national /

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்று துன்புறுத்தல்.. வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் கைது

நாயை காரில் கட்டி இழுத்துச் சென்று துன்புறுத்தல்.. வீடியோ வைரலான நிலையில் மருத்துவர் கைது

காரில் இழுத்துச் செல்லப்பட்ட நாய் - டாக்டர் ரஜ்னீஷ் குவாலா

காரில் இழுத்துச் செல்லப்பட்ட நாய் - டாக்டர் ரஜ்னீஷ் குவாலா

நாயை துன்புறுத்திய மருத்துவர் ரஜ்னிஷின் மருத்துவருக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    நாய் ஒன்றை காரில் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்று மருத்துவர் ஒருவர் கொடுமைப்படுத்தியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட டாக்டர் மீது மிருகவதை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக் கிழமையான நேற்று இந்த சம்பவம் நடந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வைரலான வீடியோவில், வெள்ளை நிற காரில், நாய் ஒன்றை கயிற்றில் கட்டிக் கொண்டு டாக்டர் ரஜ்னீஷ் குவாலா என்பவர் காரை ஓட்டிக் கொண்டே செல்கிறார்.

    தாய்லாந்தில் ஐடி வேலை வாங்கித்தருவதாக மோசடி..மியான்மரில் சிக்கித் தவிக்கும் 60 இந்தியர்கள்

    அந்த காரின் வேகத்திற்கு தாக்கு பிடிக்க முடியாமல், நாய் அங்கும் இங்கும் தள்ளாடி செல்கிறது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில்பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்நிலையில் நாயை துன்புறுத்திய மருத்துவர் ரஜ்னிஷ் குவாலா கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







    ரஜ்னிஷின் மருத்துவருக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இதற்கிடையே மருத்துவரால் துன்புறுத்தப்பட்ட நாய்க்கு, உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் மூலமாக நாய் கொண்டு செல்லப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஆசைக்கு இணங்க மறுத்த பெண்.. வீடு புகுந்து பீர் பாட்டிலால் கழுத்தறுத்த எம்.எல்.ஏ. பி.ஏ.

    தற்போது என்.ஜி.ஓ. நிறுவனம் ஒன்று காயம்பட்ட நாயை பராமரித்து வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் கூடுதல் விசாரணையை நடத்தி வருகின்றனர்.
    Published by:Musthak
    First published:

    Tags: Dog, Rajasthan

    அடுத்த செய்தி