ராஜஸ்தானில் முடிவுக்கு வரும் அரசியல் குழப்பம்...? ராகுல் காந்தியை சந்திக்கும் சச்சின் பைலட்

Rajasthan Crisis | இன்று மாலை ராகுல் காந்தியை, சச்சின் பைலட் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ராஜஸ்தானில் முடிவுக்கு வரும் அரசியல் குழப்பம்...? ராகுல் காந்தியை சந்திக்கும் சச்சின் பைலட்
அசோக் கெல்லாட் சச்சின் பைலட்
  • Share this:
ராஜஸ்தானில் உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில், முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

200 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவையில், 107 எம்எல்ஏ-க்களுடன் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், துணை முதலமைச்சர் சச்சின் பைலட், தனது ஆதரவு எம்எல்ஏ-க்களுடன் பாஜக-வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, எம்எல்ஏ-க்கள் கூட்டத்துக்கு முதலமைச்சர் அசோக் கெலாட் அழைப்பு விடுத்தார். ஜெய்ப்பூரில் உள்ள அசோக் கெலாட் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Also read... தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தயார்நிலையில் வாக்கு இயந்திரங்கள்.. தலைமை தேர்தல் அதிகாரி தகவல்..

சச்சின் பைலட்டின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் இருவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. 92 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 10 சுயேச்சை எம்எல்ஏக்களும் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட், பாஜக-வில் இணையப் போவதில்லை என்றும் புதிய கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இன்று நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அசோக் கெலாட் அரசுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.மேலும், இன்று மாலை ராகுல் காந்தியை, சச்சின் பைலட் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
First published: July 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading