ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தில் உள்ள சந்தாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜன்வர்லால் மேக்வால். இவர் அங்குள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு 3 மாதத்திற்கு முன்பு நான்காவது குழந்தையாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. ராஜஸ்தான் மாநில அரசு விதிகளின் படி இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் நிரந்தர அரசு ஊழியர் வேலை கிடையாது.
ஜகவர்லால் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வரும் நிலையில், விரைவில் தனது பணி நிரந்தரமாகும் என நம்பி காத்திருந்தார்.இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் வேலைக்கு ஆபத்தாகிவிடும் என்று எண்ணி தனது 8 வயது பெண் குழந்தையை அவரது இளைய சகோதரருக்கு தத்து கொடுத்துள்ளார். இந்த சூழலில் தான் மூன்று மாதத்திற்கு முன்பு தம்பதிக்கு மீண்டும் ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு வேலை இல்லாமல் போய் விடுமோ என எண்ணி தம்பதி இருவரும் புதிதாக பிறந்த தங்கள் குழந்தையை கொலை செய்துவிடலாம் என கொடூரமான முடிவை எடுத்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தம்பதி இருவரும் மூன்று மாத குழந்தையுடன் தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வழியால் உள்ள இந்திரா காந்தி கால்வாய் பகுதியில் உள்ள பாலத்தின் மேலிருந்து குழந்தையை நீரில் வீசியுள்ளனர்.
இதையும் படிங்க: 3 கிலோ தங்கம், ரூ.15 லட்சம் கொள்ளை.. மும்பையை அதிரச்செய்த போலி ரெய்டு..!
இந்த கோர செயலை அங்கிருந்த மக்கள் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். பதறிப்போய் வண்டியை எடுத்துக்கொண்டு தம்பதி இருவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர். அப்பகுதி மக்கள் திரண்டு குழந்தை காப்பற்ற நினைத்து நீரில் குதித்தனர். இருப்பினும் அதற்குள்ளாக குழந்தை பரிதாபமாக மரணமடைந்தது. சம்பவம் குறித்து காவல்துறையிடம் புகார் தெரிவித்த நிலையில், தந்தை ஜன்வர்லால் மற்றும் தாய் கீதா ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அரசு வேலைக்காக பிள்ளையை பெற்றோரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Child murdered, Crime News, Government jobs, Parents, Rajasthan