• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தும் உறவுகள் - விதவைப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தும் உறவுகள் - விதவைப்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

விபச்சாரத்தில் ஈடுபட உறவினர்கள் கட்டாயப்படுத்துவதாக விதவைப்பெண் ஒருவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    ராஜஸ்தானில் கணவனை இழந்த விதவைப்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்திய தம்பதியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

    ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரை சேர்ந்தவர் அனிதா. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட இவரது கணவன் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் மரணம் மற்றும் ஊரடங்கு காரணமாக அவரது குடும்பம் கடுமையான நிதிப்பற்றாக்குறையை சந்தித்தது. இந்த இக்கட்டான சூழலில் காத்து நிற்க வேண்டிய உறவுகளே அவரை தவறான பாதைக்கு அழைத்துச் சென்று பணம் சம்பாதிக்க நினைத்து அவரை அணுகியுள்ளனர்.

    Also Read: பெருங்களத்தூரில் கோர விபத்து.. பொறியியல் பட்டதாரிகள் 5 பேர் உயிரிழப்பு

    விதவைப்பெண் அனிதாவின் உறவினர்களான காஜா சிங் மற்றும் பிரியா தம்பதி அவரது வீட்டிற்கு வந்துள்ளனர். கணவனை இழந்து நீ மிகவும் கஷ்டப்படுகிறாய். பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளாய். நாங்கள் சொல்வதை கேட்டால் உனக்கு இனி கஷ்டமே இருக்காது எனக் கூறியுள்ளார். நமக்கு எதோ வேலை வாங்கித்தருவார்கள் போல என்ற எண்ணிய அந்த அப்பாவி இளம்பெண் அவர்கள் சொல்வதை கேட்டுக்கொண்டிருந்தார்.

    Also Read:  காதலியின் நிர்வாணப்படத்தை மணமகனுக்கு அனுப்பிய காதலன் - இன்ஸ்டாகிராம் காதலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

    விதவைப்பெண்ணிடம் ஆசைவார்த்தையை கூறிய அந்த தம்பதி அந்தப்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளனர். இதனைக்கேட்டு அந்தப்பெண் அதிர்ச்சியடைந்தார். தவறான பாதையில் சென்று பணம் சம்பாதிக்க எனக்கு விருப்பமில்லை. நான் உழைத்து சம்பாதித்துக்கொள்கிறேன் எனக் கூறி அந்த நபர்களை வெளியேற்றியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    ஆனால் அந்த தம்பதிகள் அனிதாவை விடுவதாக இல்லை. தொடர்ந்து அந்தப்பெண்ணை அணுகி ஆசை வார்த்தை கூறி வந்துள்ளனர். அவர்களின் பேச்சுக்கு அந்தப்பெண் செவிசாய்க்கவில்லை. இதனையடுத்து அந்த தம்பதி கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப்பெண்ணை சந்தித்து மீண்டும் பேசியுள்ளனர். அந்தப்பெண் தங்களது வழிக்கு வராததால் ஆத்திரத்தில் இருந்த தம்பதி அவரை அடித்து துன்புறுத்தியுள்ளனர். அந்தப்பெண்ணின் ஆடைகளை கிழித்து அவமானப்படுத்தியுள்ளனர்.

    இந்தச் சம்பவம் தொடர்பாக அந்தப்பெண் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விதவைப்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபட கட்டாயப்படுத்திய தம்பதிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: