• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மணமகளுக்கு கொரோனா பாஸிடிவ்: பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த ஜோடி (வீடியோ)

மணமகளுக்கு கொரோனா பாஸிடிவ்: பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த ஜோடி (வீடியோ)

பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த ஜோடிகள் (வீடியோ)

பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்த ஜோடிகள் (வீடியோ)

ராஜஸ்தான் மாநிலத்தில் ,மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் கொரோனா பாதுகாப்பு உடை அணிந்து திருமணம் நடந்துள்ளது.

  • Share this:
    ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் நடந்து முடிந்துள்ள திருமணம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. திருமணத்திற்கு முன்னர் மணப்பெண்ணும், மணமகனும் கொரோனா பரிசோதனை மேற்கொள்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது.

    இந்நிலையில் கொரோனா குறித்த அச்சம் என எதையும் பொருட்படுத்தாது, உடனே பாதுகாப்பு உடையுடன் இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர். அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தவரும் பாதுகாப்பு உடையுடன் திருமணம் நடத்தி வைத்துள்ளார்.

     

     



     

    இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    கொரோனாவிற்கு பின்னர் நடந்து முடிந்த சுவாரசிய திருமணங்கள்:

    முன்னதாக,  கொரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளநிலையில், பலரது திருமணங்கள் வித்தியாசமாக நடைபெற்று மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் கோவையில் ஆடம்பரமாக வான வேடிக்கையுடன் நடத்த திட்டமிடப்பட்ட திருமணம், கொரோனா அச்சம் காரணமாக எளிமையாக தமிழ் முறையில் 15 பேருடன் நடந்து முடிந்தது. கோவை மாவட்டம் பேரூர் காளம்பாளையத்தை சேர்த்தவர் சுப்பிரமணி. இவரது மீனாட்சி . இவருக்கும் ஈரோடு சென்னிமலையை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் கருப்பசாமி என்வருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பே திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கோவை தெலுங்குபாளையம் பகுதியில் திருமண மண்டபம் பதிவு செய்யப்பட்டது.



    1,200 பத்திரிகைகளும் அடிக்கப்பட்டு உறவினர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சம் காரணமாக 144 தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டு இருந்த திருமணத்தை எளிய முறையில் நடத்த மணமக்களின் வீட்டார் திட்டமிட்டனர். இதனையடுத்து மணமகளின் ஊரான காளம்பாளையத்தில் உள்ள சிறிய விநாயகர் கோவில் ஒன்றில் மிக எளிமையாக தமிழ்முறைப்படி திருமணம் நடைபெற்றது.

    இதேபோல் கடந்த மார்ச் 26ம் தேதி , திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பேரையூர் கிராமத்தில் சுப்பிரமணியன் - நர்மதா இருவருக்கும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், வீட்டிற்கு அருகில் உள்ள கோயிலில் எளிய முறையில் திருமணம் நடைபெற்றது.



    மணமக்களின் உறவினர்கள் 20-க்கும் குறைவானவர்களே இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதன் பின்னர் தெலுங்கானா மாநிலம் கோட்டங்குடம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆன்லைன் திருமணம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

    மணப்பெண்ணுடன் குடும்பத்தார்


    கொரோனா வைரஸ் பரவும் காரணத்தால் பல்வேறு நாடுகள் பயணக் கட்டுப்பாடுகள் விதித்திருப்பது போல சவுதி அரேபியாவிலும் கட்டுப்பாடு இருக்கும் நிலையில், மணமகன் தன் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது. அதனால் திருமணத்தை ஆன்லைனிலேயே செய்ய இரு வீட்டாரும் முடிவெடுத்து, குறித்த நாளில் மொபைல் வீடியோ கால் வழியாக திருமணம் நடைபெற்றது.



    மும்பையைச் சேர்ந்த Eric - Merlin ஜோடி திருமணத்தை முடித்த கையோடு நேரடியாக சென்று படுக்கைகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை வழங்கினர். இரண்டாயிரம் பேர் பங்கேற்போடு நடக்கவிருந்த இவர்களின் திருமணம், கொரோனா அச்சம் காரணமாக வெறும் 22 பேர் வருகையோடு நடைபெற்றது. திருமணச் செலவு சிக்கனமானதால், அந்த தொகையை பயனுள்ளதாக செலவழித்த இந்த ஜோடி, ஊரகப்பகுதியில் உள்ள தனிமைப்படுத்தல் முகாமிற்கு படுக்கைகளை வழங்கியது. இந்த கொரோனா காலத்தில் இவ்விதம் நடைபெறும் திருமணங்கள் இணையவாசிகள் கவனம் பெற்று வருகின்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: