வீர சாவர்க்கரை புகழ்ந்து பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் - புதிய சர்ச்சை

veer savarkar

சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கருக்கு எந்த பங்கும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அவர் இந்து ராஷ்டிரம் குறித்து பேசியவர் தான், ஆனால் அது தவறு இல்லை

  • Share this:
இந்துத்துவா தத்துவத்தின் தந்தை என வர்ணிக்கப்படும் வீர சாவர்கரை ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவரான கோவிந்த் சிங் தோதஸ்ரா புகழ்ந்து பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்துத்துவா கொள்கைகளை பிரபலப்படுத்தியவரும், இந்து ராஷ்டிரம் என்ற கூற்றை முன்வைத்தவருமாக கூறப்படுபவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. ஆனால் காங்கிரஸுக்கும் வீர சாவர்க்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாகத்தான் இருந்து வந்திருக்கிறது. கொள்கை ரீதியில் காங்கிரஸ் கட்சியானது, சாவர்க்கரை எதிர்த்தே வந்திருக்கிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான கோவிந்த் சிங் தோதஸ்ரா, காங்கிரஸ் நிர்வாகிகளிடையே பேசுகையில், “இந்துத்துவா சிந்தனையாளரான வீர சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுக்கவில்லை என யாரும் மறுக்க முடியாது, அவர் நாட்டுக்காக சிறை சென்றவர்” என தெரிவித்தார்.

Also Read: திமுகவின் வெள்ளை அறிக்கையை ஒற்றை மீமில் கலாய்த்த அதிமுக!

தொடர்ந்து பேசிய கோவிந்த் சிங் தோதஸ்ரா, நாட்டின் சுதந்திர போராட்டத்தில் சாவர்க்கருக்கு எந்த பங்கும் இல்லை என்று யாரும் மறுக்க முடியாது. அவர் இந்து ராஷ்டிரம் குறித்து பேசியவர் தான், ஆனால் அது தவறு இல்லை, ஏனென்றால் அப்போது நம் நாடு சுதந்திரம் பெறவில்லை, நம்முடைய அரசியலைப்பும் இயற்றப்படவில்லை.

ஆனால் நாடு சுதந்திரம் அடைந்து அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட பின்னர், நம் நாட்டில் அனைத்து மதங்களும் ஏற்றுக்கொண்ட பின்னர் சாவர்க்கரின் கொள்கைகளை பயன்படுத்தி பாஜகவும், ஆர்.எஸ்.எஸ்-ம் சகோதரர்களிடையே ஒற்றுமையை சீர்குலைக்க சதித்திட்டம் தீட்டியது. நாங்கள் (காங்கிரஸ்) இதற்கு எதிராக இருக்கிறோம் என கோவிந்த் சிங் தோதஸ்ரா பேசினார் என டைம்ஸ் நவ் நியூஸில் செய்தி வெளியாகி உள்ளது.

Also Read:  2050ல் கிடையாது, 2030லேயே பூமிக்கு ஆபத்து தான் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்!

1883ம் ஆண்டு மகாராஷ்டிராவில் பிறந்த சாவர்க்கரை இந்துத்துவ அமைப்புகளும், அந்த கொள்கைகளை பின்பற்றும் கட்சிகளும் ஹீரோவாக போற்றி வருகின்றன. சாவர்க்கர் இந்துத்துவா கொள்கையின் தந்தை எனவும் புகழப்படுகிறார்.

காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கடந்த 2019ம் ஆண்டில் ஜார்க்கண்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, மேக் இன் இந்தியா என கூறினார்கள், ஆனால் நாம் ரேப் இன் இந்தியாவைத் தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாஜக எம்.எல்.ஏக்களிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ராகுலின் இந்த பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக எம்.பிக்கள் பாராளுமன்றத்தில் வலியுறுத்தினர். இதனைத்தொடர்ந்து டெல்லியில் செய்தியாளர்களிஅடியெ பேசிய ராகுல், “என் பெயர் ராகுல் சாவர்க்கர் அல்ல, ராகுல் காந்தி, உண்மையை பேசியதற்காக மன்னிப்பு கேட்க நான் ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது..
Published by:Arun
First published: