Home /News /national /

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு!

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு!

Rajasthan CM | தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rajasthan CM | தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

Rajasthan CM | தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் உள்ள அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 90 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்றைவிட 56.5% கூடுதலான எண்ணிக்கையில் இன்று பாதிப்பு பதிவாகி உள்ளது. ஓமைக்ரான் எண்ணிக்கையும் கடுமையாக அதிகரித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றின் புதிய உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் வகை பாதிப்பு சமீப வாரங்களாக கடுமையாக அதிகரித்து நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

    அந்தவகையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 90,928 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 325 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 19,206 பேர் நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். பாசிட்டிவிட்டி ரேட் 6.43% ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2,85,401 ஆக உள்ளது. நேற்றைய தினம் 58,097 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில் இன்றைய பாதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகி உள்ளது.

    Also read: பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி இருக்கும்? பயண திட்டங்கள், தவறுகளுக்கு யார் பொறுப்பு? - Explainer

    இந்நிலையில், ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அசோக் கெலாட் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். லேசான அறிகுறிகளுடன் பாதிப்பு ஏற்பட்டிருப்பதால் பிரச்சனை இல்லை என்றும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப்படுத்திக்கொண்டு, கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அசோக் கெலாட் கேட்டுக்கொண்டுள்ளார்.

    முன்னதாக, நேற்று முன்தினம் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    Also read:  இந்தியாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பானது; ஓமைக்ரான் எண்ணிக்கை புதிய உச்சம்...

     
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Corona, Covid-19, Rajasthan

    அடுத்த செய்தி