• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு செயல் அதிகாரி காங்கிரஸ் தலைமையை விமர்சித்தாரா?

ராஜஸ்தான் முதல்வரின் சிறப்பு செயல் அதிகாரி காங்கிரஸ் தலைமையை விமர்சித்தாரா?

congress

congress

லோகேஷின் பதிவு பஞ்சாப் அரசியல் சூழலை மையப்படுத்தும் விதமாக இருந்ததாக சர்ச்சை வெடித்தது.

  • Share this:
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சிறப்பு செயல் அதிகாரி லோகேஷ் ஷார்ம் வெளியிட்ட ட்விட்டர் பதிவு காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதாக இருந்ததாக சர்ச்சை வெடித்த நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களுள் ஒன்றான ராஜஸ்தான் மாநில முதல்வரான அசோக் கெலாட்டின் சிறப்பு செயல் அதிகாரியாக இருப்பவர் லோகேஷ் ஷார்ம், இவர் நேற்று (செப்டம்பர் 18) மதியம் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தி மொழியில் வெளியிட்டிருந்த பதிவு ஒன்று சர்ச்சைக்குள்ளானதையடுத்து இன்று தனது பதவியை அவர் ராஜினாமா செய்துள்ளார்.

லோகேஷ் வெளியிட்டிருந்த பதிவில், “வலிமையானவர் கட்டாயப்படுத்தப்படுகிறார், அற்பமானது பலப்படுத்தப்படுகிறது, வேலி பயிர்களை உண்ணும்போது, ​​அத்தகைய வயலை யார் காப்பாற்ற முடியும்!” என குறிப்பிட்டிருந்தார்.

லோகேஷின் பதிவு பஞ்சாப் அரசியல் சூழலை மையப்படுத்தும் விதமாக இருந்ததாக சர்ச்சை வெடித்தது. மேலும் லோகேஷ் காங்கிரஸ் தலைமையை விமர்சிப்பதாக காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் லோகேஷ் பதிவு செய்திருந்த நேரமும், பஞ்சாப் மாநில முதல்வர் பதவியிலிருந்து கேப்டன் அமரீந்தர் சிங் விலகுவதாக தகவல் வெளியாகியிருந்த நேரமும் ஒரே நேரமாகும். எனவே அமரிந்தர் சிங்கிற்கு ஆதரவாக காங்கிரஸ் தலைமையை லோகேஷ் விமர்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

Also Read: இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

மாநில காங்கிரஸ் தலைவரான நவ்ஜோத் சிங் சித்துவிற்கும், அமரிந்தர் சிங்கிற்கும் நீண்ட காலமாகவே புகைச்சல் இருந்து வந்த நிலையில், இந்த சர்ச்சைகளின் உச்சமாக முதல்வர் பதவியிலிருந்து கேப்டன் அமரிந்தர் சிங் விலகியுள்ளார்.

2018ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திலும் இதே போன்றதொரு அரசியல் சூழல் ஏற்பட்டது. தற்போதைய முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே அரசியல் பகை ஏற்பட்டது. பின்னர் சச்சின் முகாமைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் சிலர் தனியாக சொகுசு விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். சச்சின் பைலட் முதல்வர் பதவியை குறிவைத்து காய் நகர்த்தினார். சச்சின் பைலட் பாஜகவுக்கு செல்வார் என தகவல்கள் வெளியான நிலையில், காங்கிரஸ் மேலிடம் இருவரையும் டெல்லிக்கு வரவழைத்து பின்னர் அசோக் கெலாட்டை முதல்வராக அறிவித்தது நினைவுகூறத்தக்கது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: