ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நிலவி வரும் சூழலில் முதலமைச்சர் அசோக் கெலாட் திடீரென அம்மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவைச் சந்தித்து பேசினார். ஆளுநர் மாளிகையில் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது கொரோனா தடுப்புப் பணிகள் பற்றி முதலமைச்சர் விளக்கமளித்ததாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அரசுக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏக்களின் பட்டியலை ஆளுநரிடம் வழங்கியதாகவும், சட்டப்பேரவையை அடுத்த வாரம் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளதாகவும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
Also read: அயோத்தி ராமர் கோயிலுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி அடிக்கல்: மூன்றரை ஆண்டுகளில் கட்டுமானத்தை முடிக்க திட்டம்
பாரதிய பழங்குடியினர் கட்சி எம்.எல்.ஏக்கள் இருவர் அரசுக்கு அளித்த ஆதரவைத் திரும்பப் பெற்ற சில மணி நேரத்தில் மீண்டும் அரசை ஆதரிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இதற்கிடையே, ராஜஸ்தானில் கெலாட் அரசைக் கவிழ்க்க அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் பாஜகவினர் பேரம் பேசிய விவகாரம் தொடர்பாக விரிவான அறிக்கையளிக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.