’கும்பல் தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் வழக்கில் அலட்சியம்’! தற்கொலை செய்த கண்பார்வையற்ற தந்தை குற்றச்சாட்டு

ஹரிஷின் தந்தை ராட்டிராம் ஜாதவ், சுதந்திர தினமான நேற்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

news18
Updated: August 16, 2019, 1:23 PM IST
’கும்பல் தாக்குதலில் உயிரிழந்த இளைஞர் வழக்கில் அலட்சியம்’! தற்கொலை செய்த கண்பார்வையற்ற தந்தை குற்றச்சாட்டு
காவல்துறை
news18
Updated: August 16, 2019, 1:23 PM IST
ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் கும்பல் தாக்குதலால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட தலித் இளைஞரின் கண்பார்வையற்ற தந்தை தற்கொலை செய்துள்ளார்.

இந்தியாவின் பல்வேறு பகுதியில் கும்பல் தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்துவருகிறது என்று சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். இந்தநிலையில், ஜூலை மாதம் 16-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வார் மாவட்டத்தில் ஹரிஷ் ஜாதவ் என்ற 28 வயது இளைஞர் பைக்கில் செஃன்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையில் சென்ற பெண்ணின் மீது மோதிவிட்டார். அதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவரை கும்பலாகச் சேர்ந்த மிகக் கடுமையாகத் தாக்கினர். அதில், படுகாயமடைந்த அவர் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், டெல்லியிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். அதிகபட்ச காயம் காரணமாக அவர் உயிரிழந்தார்.


இந்தநிலையில், ஹரிஷின் தந்தை ராட்டிராம் ஜாதவ், சுதந்திர தினமான நேற்று விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார். தனது மகன் கொல்லப்பட்ட விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நவடிக்கை எடுக்காததன் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, ராடிராம் உடல் உடற்கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஹரிஷ் ஜாதவ் உயிரிழந்த நேரத்தில் அந்தச் சம்பவம் குறித்து பேசிய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாரிஸ் தேஷ்முக், ‘ஹரிஷின் உடற்கூராய்வு அறிக்கை வரும் வரையில் இதனை கும்பல் தாக்குதல் என்று எங்களால் கூற முடியாது. அதற்கான ஆதாரங்கள் இல்லை’என்று தெரிவித்தார். 2017-ம் ஆண்டு கும்பல் தாக்குதலால் பெஹ்லூ கான் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Also see:

Loading...

First published: August 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...