போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு பறவைக் காய்ச்சலை பரப்புகிறார்கள் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு பறவைக் காய்ச்சலை பரப்புகிறார்கள் - பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு

மதன் திலாவர்

டெல்லியில் போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு பறவைக் காய்ச்சலை பரப்ப சதி செய்வதாக பாஜக எம்எல்ஏ மதன் திலாவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

 • Share this:
  மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர் டெல்லி மாநில எல்லையில் கடும் குளிரையும் மழையையும் பொருட்படுத்தாது 45 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயப் பிரதிநிதிகள் நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கிடையில், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளின் போராட்டம் 46-வது நாளை எட்டியுள்ள நிலையில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து பாஜக தலைவர்கள் பலர் சர்ச்சை கருத்துக்களை கூறி வருகின்றனர்.

  இந்நிலையில், ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர், டெல்லியில் போராடுவோர் நாட்டை பற்றி கவலைக்கொள்ளாமல் ஆடம்பரமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் என்ற போர்வையில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த திருடர்கள் மற்றும் கொள்ளையர்கள் போராட்டம் நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். போராடும் விவசாயிகள் பறவைக் காய்ச்சலைப் பரப்புவதற்காக சிக்கன் பிரியாணியைச் சாப்பிடுகின்றனர்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: