முகப்பு /செய்தி /இந்தியா / சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு கடிதம் எழுதிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

சட்டப்பேரவையைக் கூட்ட ஆளுநருக்கு கடிதம் எழுதிய ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

அசோக் கெல்லாட், சச்சின் பைலட்

அசோக் கெல்லாட், சச்சின் பைலட்

ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க அம்மாநில உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என முதலமைச்சர் அசோக் கெலாட் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக செயல்பட்டதால், அம்மாநில துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேரையும் தகுதி நீக்கம் செய்ய சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பினார்.

இதை எதிர்த்து, சச்சின் பைலட் தரப்பினர், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். அந்த மனுவை விசாரித்த, உயர்நீதிமன்ற ஜெய்ப்பூர் கிளை நீதிபதிகள், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்தது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையும் ஒருதரப்பாக சேர்க்கவும் நீதிபதிகள் அனுமதியளித்தனர்.

இதனால், சச்சின் பைலட் உள்ளிட்டோர் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ராஜஸ்தான் சட்டப்பேரவையைக் கூட்ட வேண்டும் என ஆளுநருக்கு, முதலமைச்சர் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் படிக்க...

சுதந்திர தினம் எப்படி கொண்டாடப்பட வேண்டும்...? வழிகாட்டு முறைகளை வெளியிட்ட மத்திய அரசு

இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அவர், தனது ஆட்சிக்கு பெரும்பான்மை இருப்பதாகவும், சட்டப்பேரவையைக் கூட்டினால் அனைத்து பிரச்சனைகளுக்கும் தெளிவான முடிவு கிடைத்துவிடும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Rajasthan, Sachin pilot