• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • ரீட் தேர்வில் முறைகேடு செய்ய மனைவிகளுக்கு உதவிய இரு காவலர்கள் கைது

ரீட் தேர்வில் முறைகேடு செய்ய மனைவிகளுக்கு உதவிய இரு காவலர்கள் கைது

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ராஜஸ்தான் மாநில ஆசிரியர் தகுதித் தேர்வில் மனைவிகளுக்கு உதவிய இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • Share this:
    ரீட் என்பது (Rajasthan Eligibility Exam for Teachers) ராஜஸ்தான் மாநிலத்தில் ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு. இது ராஜஸ்தான் மாநில உயர்கல்வித் துறையால் நடத்தப்படுகிறது. ராஜஸ்தான் அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக ஆவதற்கு REET தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுக்காக மாநிலம் முழுவதும் 4,153 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

    அரசுப் பள்ளிகளில் 31,000 பணியிடங்களுக்கான தேர்வை 16 லட்சம் பேர் எழுதினர். மேலும் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் விதமாக பல்வேறு இடங்களில் இணையச் சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டிருந்தது.

    இந்தநிலையில், ராஜஸ்தான் மாநிலம் சாவை மாதோபூர் மாவட்டத்தின் கங்காபூரில் ரீட் தேர்வில் தங்களது மனைவி தேர்ச்சி பெற உதவிய இரண்டு போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். ரீட் தேர்வு 10 மணிக்கு தொடங்கிய நிலையில், அதற்கு ஒருமணி நேரத்துக்கு முன்னரே தலைமைக் காவலர் யாதுவிர் சிங் மற்றும் காவலர் தேவேந்தர் சிங் ஆகியோரின் மொபைல் போனில் ரீட் தேர்வுக்கான வினாத்தாள் இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

    அதனையடுத்து, அந்த போலீசாரின் மனைவிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்ட போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல, சிரோஹி மாவட்டத்திலும் இந்த தேர்வில் முறைகேடு செய்ய உதவியதாக காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    ஆறுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக சுமார் 40 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இதே ரீட் தேர்வில் செருப்பில் ப்ளூடூத் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: