Home /News /national /

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் ஆள்மாறாட்டம் : 35 வயது நபர் கைது!

வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வில் ஆள்மாறாட்டம் : 35 வயது நபர் கைது!

தேர்வு

தேர்வு

தஜிகிஸ்தானில் MBBS பட்டம் பெற்ற 35 வயது நபர் ஒருவர், இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானதையடுத்து அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசிக்கும் மனோகர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
தஜிகிஸ்தானில் MBBS பட்டம் பெற்ற 35 வயது நபர் ஒருவர், இந்தியாவில் பயிற்சி பெறுவதற்கான தகுதித் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது அம்பலமானதையடுத்து அவர் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் ராஜஸ்தானின் பாலி மாவட்டத்தில் வசிக்கும் மனோகர் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகள், "மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான தேசிய தேர்வு வாரியம் (National Board of Examinations) நடத்திய வெளிநாட்டு மருத்துவ பட்டதாரிகள் தேர்வுக்கு (Foreign Medical Graduates Examination) மனோகர் சிங் தன்னை பதிவு செய்திருந்தார். பிற நாடுகளிலிருந்து முதன்மை மருத்துவத் தகுதியை பூர்த்தி செய்த இந்தியர்கள் அல்லது இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்களுக்கான உரிமப் பரிசோதனைக்கான தேர்வு தான் இது" என்று அவர்கள் தெரிவித்தனர்.

கடைசியாக FMGE தேர்வு எழுதியவர்களுக்கு ஸ்கிரீனிங் சோதனை கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 4-ம் தேதியன்று நடத்தப்பட்டது. சிங்குக்கு மதுரா சாலையில் ஒரு சோதனை மையம் ஒதுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர். ஸ்க்ரீனிங் சோதனையில், சிங்கின் விண்ணப்ப படிவத்தில் உள்ள புகைப்படத்திற்கும் தேர்வு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கும் இடையில் எந்த பொருத்தமும் இல்லாததால் அவரது தேர்வு முடிவுகள் முடக்கப்பட்டன.

இதையடுத்து பிப்ரவரி 3-ம் தேதி முக அடையாளத்தை சரிபார்க்க அவர் மீண்டும் அழைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் பரிசோதனைக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து தென்கிழக்கு துணை போலீஸ் கமிஷனர் ஆர்.பி. மீனா, "கடந்த புதன்கிழமை (மார்ச் 10), சிங் முக அடையாள சரிபார்ப்புக்காக NBE-ஐ பார்வையிட்டார். தேர்வு நாளில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ஐடியை குழு சரிபார்த்தபோது, அது பொருந்தவில்லை. பின்னர், அவர் ஒரு கேள்விக்கு தவறாக பதிலளித்தார். இது NBE குழுவுக்கு சந்தேகத்தைத் தூண்டியது. இதையடுத்து அதிகாரிகள் அந்த நபர் மீது புகார் கொடுத்ததை தொடர்ந்து, அவர் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பிறகு ஆள்மாறாட்டம் செய்த குற்றத்திற்காக சிங் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்த அட்மிட் கார்டு, எம்பிபிஎஸ் பட்டம் மற்றும் விண்ணப்ப படிவம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக" கூறினார். இந்த சம்பவம் குறித்து சிங்கிடம் நடத்திய விசாரணையின் போது, அவர் தஜிகிஸ்தானில் தனது எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த ஆறு ஆண்டுகளாக FMGE தேர்வினை கிளியர் செய்ய தான் முயற்சித்து வந்ததாகவும் போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார். பிறகு, தனக்காக தேர்வு எழுத முன்வந்த ஒரு மருத்துவரை சந்தித்துள்ளார். மேலும் தேர்வினை கிளியர் செய்ய அந்த மருத்துவருக்கு ரூ.4 லட்சம் பணம் கொடுத்ததாகவும் சிங் ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில் டிசம்பர் 4-ம் தேதி நடந்த தேர்வில் மனோகர் சிங்கிற்கு பதிலாக அந்த மருத்துவர் தேர்வெழுதியுள்ளார்.

Must Read : குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெறமாட்டோம் - அதிமுக தேர்தல் அறிக்கைக்கு எதிராக நிற்கும் பாஜக

 

தற்போது ஆள்மாறாட்டத்திற்கு உதவிய மருத்துவர் மற்றும் இதன் பின்னணியில் உள்ள மற்ற நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Published by:Ram Sankar
First published:

Tags: Exam, MBBS

அடுத்த செய்தி