Home /News /national /

பாஜகவில் இணையப் போவதில்லை - சச்சின் பைலட் திட்டவட்டம்

பாஜகவில் இணையப் போவதில்லை - சச்சின் பைலட் திட்டவட்டம்

சச்சின் பைலட் | அசோக் கெலாட்

சச்சின் பைலட் | அசோக் கெலாட்

பாஜகவில் இணையப்போவதில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ள சச்சின் பைலட், ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைக்க கடுமையாக உழைத்தாகத் தெரிவித்துள்ளார்.

    ராஜஸ்தானில் சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் அதிருப்தி எம்.எல்.ஏக்களிடம் விளக்கம் கேட்டு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 

    ராஜஸ்தானில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு அமைச்சர்கள் இருவரின் பதவி பறிக்கப்பட்டது. மேலும், மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்தும் சச்சின் பைலட் நீக்கப்பட்டார்.

    இந்நிலையில், சச்சின் பைலட் உட்பட 19 அதிருப்தி எம்.எல்.ஏக்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் விளக்கமளிக்கும்படி சபாநாயகர் சி.பி.ஜோசி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததற்காக உங்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என்று பதிலளிக்கும்படி சபாநாயகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Also read: மாதத்திற்கு ரூ.1 கோடி சம்பாதித்த விகாஸ் துபே - அந்தப் பணம் எங்கே என விசாரணை

    சட்டப்பேரவையில் முதலமைச்சர் அசோக் கெலாட் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் பட்சத்தில் 19 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பைச் சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முதலமைச்சர் அசோக் கெலாட் தனது அமைச்சரவையை இன்று மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே பாஜகவினர் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இன்று ஆலோசிக்க உள்ளதால் உச்சகட்ட பரபரப்பு நிலவுகிறது. செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த சச்சின் பைலட், தான் பாஜகவில் இணையப் போவதில்லை என்று தெரிவித்தார். ராஜஸ்தானில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைக்க தாம் கடுமையாக உழைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
    Published by:Rizwan
    First published:

    Tags: Congress, Rajastan

    அடுத்த செய்தி