ஏர்போர்ட் முதல் திருப்பதி மலை அடிவாரம் வரை...! திருப்பதி வரும் ராஜபக்சவுக்கு இதுவரை இல்லாத சிறப்பான வரவேற்பு

ஏர்போர்ட் முதல் திருப்பதி மலை அடிவாரம் வரை...! திருப்பதி வரும் ராஜபக்சவுக்கு இதுவரை இல்லாத சிறப்பான வரவேற்பு
ராஜபக்ச
  • Share this:
திருப்பதிக்கு வருகை தர இருக்கும் இலங்கை பிரதமர் ராஜபக்சவுக்கு இதுவரை இல்லாத வகையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீவிர ஏழுமலையான் பக்தரான இலங்கை பிரதமர் ராஜபக்சே இந்தியாவுக்கு வரும் ஒவ்வொரு முறையும் திருப்பதி மலைக்கு வந்து ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். அந்த வகையில் தற்போதைக்கு இந்தியாவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராஜபக்சே ஏழுமலையான் தரிசனத்திற்காக இன்று மாலை திருப்பதி மலைக்கு வர இருக்கிறார்.

ராஜபக்சே இலங்கை அதிபராக இருந்தபோதும் பலமுறை திருப்பதி மலைக்கு வந்து இருக்கிறார். அப்போது ரேணிகுண்டா விமான நிலையம், திருப்பதி மலையில் அவர் தங்கும் விருந்தினர் மாளிகை ஆகியவற்றில் மட்டுமே வெளிநாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கும் வகையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆனால் இந்த முறை வழக்கத்திற்கு மாறாக சிறப்பான முறையில் அவருக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலை அடிவாரம் வரை ராஜபக்சேவிற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் வெல்கம் டு இந்தியா என்று ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் ரேணிகுண்டா விமான நிலையத்தில் இதுவரை இல்லாத வகையில் அவரை வரவேற்கவும் அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

ராஜபக்ச வருகையை முன்னிட்டு ரேணிகுண்டா விமான நிலையம் முதல் திருப்பதி மலையில் அவர் தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகை வரை தீவிர போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் படிக்க: புதுச்சேரி மீனவர் வலையில் சிக்கிய ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள அரிய வகை எலிப் பூச்சி!
First published: February 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்