முகப்பு /செய்தி /இந்தியா / ”கட்சியில் உழைப்புக்கு அங்கீகாரமில்லை...” - காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் விளக்கம்!

”கட்சியில் உழைப்புக்கு அங்கீகாரமில்லை...” - காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளுப்பேரன் விளக்கம்!

சி.ஆர்.கேசவன்

சி.ஆர்.கேசவன்

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜாஜியின் கொள்ளுப்பேரன் சி.ஆர்.கேசவன், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, கட்சித் தலைவர் மல்லிகாஜூர்ன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ள அவர், சேவை செய்ய வேண்டும் என்பதற்காக, 2001ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து வந்து கட்சியில் இணைந்ததாகவும், ஆனால், கட்சியில் மதிப்புமிகு அடையாளத்தைத் தாம் உணரவில்லை எனக் கூறியுள்ளார்.

இனியும் இணைந்து செயல்பட முடியாது என்பதால், ராகுலின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், தமக்கான பாதையை உருவாக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.

மேலும் தான் உடனடியாக கட்சியில் இருந்து விலகுவதாகவும், தனது ராஜினாமா கடிதத்தைத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Also Read : "மகளை பெற்ற அப்பாக்கள் பாக்கியவான்கள்" அப்பாவுக்கு கல்லீரலை தானமாக வழங்கிய மகள்!

மூத்த கட்சி உறுப்பினரான அவர், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நிலையில் பாஜக -வில் இணைய உள்ளாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

First published:

Tags: Congress party