Home /News /national /

எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்.. அந்த அதிகாரியிடம் கொடுத்துடுங்க - ராஜஸ்தான் அமைச்சரின் பரபரப்பு ட்வீட்

எனக்கு அமைச்சர் பதவியே வேண்டாம்.. அந்த அதிகாரியிடம் கொடுத்துடுங்க - ராஜஸ்தான் அமைச்சரின் பரபரப்பு ட்வீட்

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுன் அமைச்சர் அசோக் சந்தானா

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுன் அமைச்சர் அசோக் சந்தானா

தனது தனிச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உள்ள அதிருப்தி காரணமாக இந்த கோரிக்கையை அவர் வெளிப்படையாக முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.

    ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. இந்த அமைச்சரவையில் பதவி வகிக்கும் அமைச்சர் ஒருவர் என்னை பதவியில் இருந்து விலக்கிவிடுங்கள் என பரபரப்பு கோரிக்கையை வைத்துள்ளார். தனது தனிச் செயலாளர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மீது உள்ள அதிருப்தி காரணமாக இந்த கோரிக்கையை அவர் வெளிப்படையாக முதலமைச்சரிடம் முன்வைத்துள்ளார்.

    ராஜஸ்தான் மாநிலத்தின் விளையாட்டு மற்றும் இளைஞர் நிலன், வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு, பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணம் ஆகிய துறைகளின் அமைச்சராக இருப்பவர் அசோக் சந்தா. இவர் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு நெருக்கமானவர். இவர் தனது ட்விட்டரில் முதலமைச்சரிடம் நேற்று இரவு பரபரப்பு கோரிக்கையை வைத்துள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் எனக்கு ஒரு கோரிக்கை உள்ளது. என்னை இந்த கொடூரமான அமைச்சர் பதவியில் இருந்து விலக்கி, எனது துறைகளின் அனைத்து பொறுப்புகளையும் அதிகாரி குல்தீப் ரங்காவிடம் அளித்துவிடுங்கள். காரணம் இப்போது அவர் தான் அமைச்சர் போல செயல்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

    அமைச்சரின் இந்த திடீர் போர்க்கொடி ராஜஸ்தான் அரசுக்கு புது தலைவலியை உருவாக்கியுள்ளது. முன்னதாக மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவரான கணேஷ் கோஹ்ரா கட்சி மீதான அதிருப்தி காரணமாக மே 18ஆம் தேதி ராஜினாமா செய்துள்ளார். அசோக் சந்தானா ட்வீட் செய்த சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் அரசை விமர்சித்து பிரதான எதிர்க்கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவர் சதீஷ் பூணியா ட்வீட் செய்துள்ளார். காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல். 2023ஆம் ஆண்டுக்கான வெள்ளோட்டம் இப்போதே தெரிகிறது என்றுள்ளார்.



    2023ஆம் ஆண்டில் ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதே ஆளும் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி குரல் தீவிரமாக வெளிவரத் தொடங்கியுள்ளது.

    இதையும் படிங்க: நாயுடன் நடைபயிற்சி செய்ய மைதானத்தை காலி செய்த ஐஏஎஸ் தம்பதி அதிரடி டிரான்ஸ்பர் - உள்துறை அமைச்சகம் நடவடிக்கை

    மாநிலத்தில் ஏற்கனவே முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கும் இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கும் பனிப்போர் நிலவி வரும் சூழலில் இது போன்ற அதிருப்தி எம்எல்ஏக்கள் விவகாரம் எதிர்க்கட்சியான பாஜகவுக்கு கூடுதலாக சாதகமான பலன்களைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக ராஜஸ்தானில் ஆளும் கட்சி மீண்டும் இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்ததில்லை. இதன் காரணமாகவே 5 ஆண்டுக்கு ஒரு முறை காங்கிரஸ், பாஜக மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன.
    Published by:Kannan V
    First published:

    Tags: Congress party, Rajasthan, Rajasthan Election

    அடுத்த செய்தி