• HOME
  • »
  • NEWS
  • »
  • national
  • »
  • மகாராஷ்டிராவில் அவலம் : கொரோனா வார்டுக்குள் கொட்டிய மழைநீர் - நோயாளிகள் கடும் அவதி

மகாராஷ்டிராவில் அவலம் : கொரோனா வார்டுக்குள் கொட்டிய மழைநீர் - நோயாளிகள் கடும் அவதி


மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா

மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் மழைநீர் கொட்டியதால் கொரோனா நோயாளிகள் அவதியடைந்தனர்.

  • Share this:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் சங்கிலி தொடர்ச்சியை உடைக்க மத்திய, மாநில அரசுகள் முயற்சி எடுத்து வருகின்றனர். டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் போதிய சுகாதார கட்டமைப்பு இல்லாத காரணத்தால், சிகிச்சை பெற முடியாமல் பலர் உயிரிழந்து வருகின்றனர்.

குறிப்பாக அரசு மருத்துவமனைகளில் தரம் மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தின், ராஜ்கார் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் மழை நீர் கொட்டியுள்ளது. அப்போது, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் கடும் அவதியடைந்தனர். மேற்கூரையை முறையாக அமைக்கப்படாததால் மழைநீர் புகுந்ததற்கு காரணமாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

ALSO READ | கொரோனா வார்டுகளாக மாறிய கோயில் மண்டபங்கள்!

அந்த வீடியோவில் அவசர சிகிச்சையின் மேற்கூரை வழியாக மழைநீர் கொட்டுவது பதிவாகியுள்ளது. சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள், மழை நீரில் நனைந்தபடியே படுக்கையில் படுத்திருகின்றனர். அந்த வீடியோவில் பேசிய கொரோனாவுக்கு சிகிச்சை எடுத்து வருவபவரின் உதவியாளர், அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

மேற்கூரைகள் மிகவும் மோசமாக இருப்பதாகவும், இதனால் பெய்யும் மழைநீர் கொரோனா வார்டுக்குள் கொட்டுவதாக கவலையுடன் தெரிவித்துள்ளார். இதனை சரி செய்ய மருத்துவமனை சார்பில் யாரும் முன்வரவில்லை எனக் கூறிய அவர், கொரோனா வார்டுக்குள் தேங்கியிருக்கும் மழைநீரை அகற்றுவதற்கு கூட சுகாதார பணியாளர்கள் இல்லை என குற்றம்சாட்டினார்.

 



மழை நீரை அகற்றக்கோரி சுகாதாரப் பணியாளர்களிடம் கூறியதாகவும், அவர்கள் யாரும் நீண்ட நேரமாகியும் வரவில்லை என தெரிவித்தார். கடைசியாக, நோயாளிகளின் உதவியாளர்களே கொரோனா வார்டுக்குள் இருக்கும் மழை நீரை அகற்றியுள்ளனர். இந்த வீடியோ தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராஜ்கார் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ பாபு சிங் தன்வார், கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

ராஜ்கார் அரசு மருத்துவமனையில் அந்தக் கட்டம் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக கட்டப்பட்டதாகவும், அதனுடைய மோசமான தரம் மழை மூலம் வெட்ட வெளிச்சமாகியிருப்பதாக கடுமையாக சாடியுள்ளார்.

ALSO READ | கொரோனாவை வென்ற 110 வயது நபர் - அதுவும் ஸ்டைலா.. கெத்தா!

கொரோனா வார்டு கட்டப்பட்டத்தில் ஊழல் நடைபெற்று இருப்பதாக தெரிவித்துள்ள பாபுசிங் தன்வார், மாநில முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ராஜ்கார் மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி மருத்துவர் யெட்டு பேசும்போது, 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அந்த வார்டு அண்மையில் கட்டப்பட்டது என்பதை உறுதி செய்தார். நோயாளிகளுக்கு ஏற்பட்டு அசௌகரியத்தை போக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: