மழையின் தாக்கம் குறைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்

news18
Updated: August 11, 2019, 12:40 PM IST
மழையின் தாக்கம் குறைந்துள்ளது - வானிலை ஆய்வு மையம்
கோப்புப்படம்
news18
Updated: August 11, 2019, 12:40 PM IST
தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கேரளா, கர்நாடகா மற்றும் தமிழக மலை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக அதீத கனமழையை கொடுத்து வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மழையின் தாக்கம் குறைந்தாகவும்,இன்று மட்டும் நீலகிரி,கோவை மற்றும் தேனி மாவட்ட மலை சார்ந்த பகுதிகளில் கனமழை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதா சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தேவாலாவில் 13செ.மீ மழையும்,கோவை சின்னக்கல்லாரில் 10செ.மீ மழையும்,சோழையார் மற்றும் அவலாஞ்சியில் 8செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

மேலும் தேனி மாவட்டம் பெரியார்,திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

தென் மேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கி.மீ வரை கடல் காற்று வீசி வருவதால் தென் தமிழக பகுதிகளில் மீனவர்கள் இன்றும் நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னயை பொருத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும்,மாலையில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 37 டிகிரி செல்சியஸ்,
குறைந்தபட்சமாக 27டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: August 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...