Home /News /national /

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத்

8 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கன மழை வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் குஜராத்

வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்

வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்

Orange Alert | குஜராத் மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    குஜராத்தில் கனமழை காரணமாக பல முக்கிய நகரங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த கனமழையானது மேலும் சில நாட்களுக்கு தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மாநிலத்தின் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் தெற்கு குஜராத் பகுதியில் தான் வெள்ள ஏற்படும் அபாயம் உள்ளதாக மாநில வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

    குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் சூரத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், அந்நகரத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மேலும், மாநிலத்திலேயே அதிகபட்சமாக சூரத் நகர் தீவிர வெள்ள பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. பல முக்கிய சாலைகளில் நீர் வடியாமல், சில அடி உயரத்திற்குத் தேங்கியுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியுள்ளது. பெட்ரோல் பங்க் போன்றவற்றின் செயல்பாடும் தடைப்பட்டுள்ளது.


    சூரத்தில் கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்ட நிலையில், அங்கு வெள்ள பாதிப்பில் சிக்கி தவிக்கும் நபர்கள் பாதுகாப்பான நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: 5வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ரயிலில் டிக்கெட் வாங்க வேண்டுமா? ரயில்வே விளக்கம்

    குஜராத் மட்டுமல்லாது கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மத்திய பிரதேசம், ஜார்கண்ட், சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை பெய்யும் எனவும், வட மாநிலங்களான உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஒரு சில இடங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    Published by:Kannan V
    First published:

    Tags: Flood alert, Gujarat, Heavy Rainfall

    அடுத்த செய்தி