ஹோம் /நியூஸ் /இந்தியா /

பண்டிகைக் கால கூட்ட நெரிசலை தடுக்க அடுக்கடுக்கான திட்டங்கள்.. ரயில்வே போட்ட பக்கா ப்ளான்!

பண்டிகைக் கால கூட்ட நெரிசலை தடுக்க அடுக்கடுக்கான திட்டங்கள்.. ரயில்வே போட்ட பக்கா ப்ளான்!

 ரயில்

ரயில்

பண்டிகைக் காலங்களில் ஏதேனும் எதிர்பாராத விதமாக விபத்து நடந்தால், அதை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • New Delhi, India

  பண்டிகைக் காலங்களில் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் கூட்ட நெரிசல் எந்த அளவுக்கு இருக்கும் என்று நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உங்கள் வாழ்க்கையில் பல முறை இந்த அனுபவம் நேர்ந்திருக்கும். விலகுவதற்கு கூட இடமில்லாமல் மனிதர்கள் கூட்டம், கூட்டமாக நீங்கள் நகர்ந்து கொண்டிருக்கையில், நீங்கள் கீழ் குனிய முற்பட்டால் வேறொருவர் மீது இடிக்கும் அளவுக்கு நெரிசல் இருக்கும்.

  இத்தகைய சூழலில், பண்டிகைக் காலங்களில் ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், ஒழுங்குபடுத்தவும் சில நடவடிக்கைகளை இந்திய ரயில்வே துறை மேற்கொள்ள உள்ளது. சாதாரணமாக நடைமேடைகளில் பண்டிகைக் காலங்களில் பார்வையாளர்கள் அதிக அளவில் கூடுவதைத் தடுக்க குறுகிய காலத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதே சமயம், பயணிகளால் ஏற்படும் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தவும் திட்டமிடப்பட்டு வருகிறது.

  வழக்கமாக இயக்கப்படும் ரயில்கள் மற்றும் பண்டிகைக்கால சிறப்பு ரயில்கள் ஆகிய அனைத்துமே, புறப்படும் ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களுக்கு முன்னதாக நிறுத்தி வைக்கும் வகையிலும், அதே சமயம் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

  இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, எந்த ரயில் எந்த நடைமேடையில் நிற்கும் என்ற தகவலை முன்கூட்டியே அறிவிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்படி அறிவிக்கப்படும் நடைமேடை எண்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் மாற்றப்படக் கூடாது என திட்டமிடப்படுகிறது.

  Read More: செவிலியர் கட்டி வைத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை - சிறுவன் உட்பட மூவர் கைது

  ரயில்கள் குறித்த விசாரணை மற்றும் அறிவிப்பு குறித்து முறையான கட்டமைப்பு வசதிகள் இருப்பது உறுதி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல் ரயில் தகவல் பலகையில், உடனுக்குடன் தகவல்களை வெளியிட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

  பண்டிகைக் காலங்களில் ஏதேனும் எதிர்பாராத விதமாக விபத்து நடந்தால், அதை சமாளிக்க தயார் நிலையில் இருக்குமாறு ரயில்வே மருத்துவமனைகள் மற்றும் முதலுதவி சிகிச்சை மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  Read More: தீபாவளி பட்டாசுக் கடையில் தீ விபத்து.. உடல் கருகி இருவர் பலி.!

   எஸ்கலேட்டர்களை நிறுவுவது, பிரத்யேக வாட்ஸ் அப் குழுக்கள் மூலமாக பயணிகள் கூட்டத்தை கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

  இயக்கப் பணியாளர்கள், வர்த்தகப் பணியாளர்கள், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், ஆர்பிஎஃப் மற்றும் மருத்துவக் குழுவினர் அடங்கிய மினி கட்டுப்பாட்டு அறை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி, ரயில் குறித்த தகவல், சுற்றியுள்ள பகுதிகளின் சிசிடிவி பதிவுகள் உள்ளிட்டவை இருக்கும்.

  மிக அதிகப்படியான கூட்டம் சேரும் பட்சத்தில் ஆர்பிஎஃப், ஆர்பிஎஸ்எஃப், ஜிஆர்பி, தன்னார்வலர்கள், ஸ்கவுட் மாணவர்கள் உள்ளிட்டோரின் உதவியுடன் கூட்டத்தை ஒழுங்குமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவர்களை தயார் நிலையில் வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Indian Railways