ரயிலில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை?

ரயிலில் இரவு நேரங்களில் செல்போன், லேப்டாப் சார்ஜ் போடத் தடை?

ரயில்வே

ரயிலில் தீ விபத்தை தடுக்கும் விதமாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை பயணிகள் மொபைல் சார்ஜ் செய்ய அனுமதி இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 • Share this:
  ரயிலில் பயணம் செய்பவர்கள் இரவு நேரங்களில் செல்போன் மற்றும் லேப்டாப்களை சார்ஜ் செய்ய தடை விதிக்க, ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  அதன்படி, இரவு 11 மணியிலிருந்து காலை 5 மணி வரை சார்ஜ் செய்ய தடை விதிக்கப்படுகிறது. இதற்காக, குறிப்பிட்ட 6 மணி நேரத்தில், பிளக் பாயிண்டில் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கூறப்படுகிறது. தீ விபத்துக்கள் ஏற்படுவதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

  மேற்கு ரயில்வேயில் ஏற்கனவே இந்த திட்டத்தை, அமல்படுத்த தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  Published by:Sankaravadivoo G
  First published: