கொரோனா அச்சுறுத்தல்: தனி வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்... உதவும் ரயில்வே..!

’இவ்வகையான தயாரிப்பு நடவடிக்கைகள் அனைத்துமே முன்னெச்சரிக்காக மட்டுமே செய்யப்படுகின்றன’.

கொரோனா அச்சுறுத்தல்: தனி வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்... உதவும் ரயில்வே..!
மாதிரிப்படம்
  • Share this:
கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள இந்திய அரசு தயாராகி வருகிறது. இத்தகைய சூழலில் உதவுவதற்காக இந்திய ரயில்வே துறை ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக மாற்றவும் புதிதாக வென்ட்டிலேட்டர்களை தயாரிக்கவும் உதவுவதாக அறிவித்துள்ளது.

கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உதவும் வகையில் ரயில் பெட்டிகளை தனி மருத்துவ வார்டுகளாக தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐசிஎஃப் தொழிற்சாலை மருத்துவ வென்ட்டிலேட்டர்களைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

கிராமப்பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வைரஸ் பரவல் ஏற்படும் சூழலில் ரயில் பெட்டிகள் மருத்துவ உதவிகளுக்குப் பயன்படுத்தப்படும் என ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.


இவ்வகையான தயாரிப்புக் நடவடிக்கைகள் அனைத்துமே முன்னெச்சரிக்காக மட்டுமே செய்யப்படுகின்றன என்றும் பியூஷ் கோயல் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் பார்க்க: தொடர்ந்து மூன்றாவது பேரிழப்பு... மத்திய அரசின் உதவி கோரும் கேரளா!
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்