ஹோம் /நியூஸ் /இந்தியா /

13 லட்சம் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு.. ஆய்வுக்குழு அமைத்தது இந்தியன் ரயில்வே...

13 லட்சம் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு.. ஆய்வுக்குழு அமைத்தது இந்தியன் ரயில்வே...

ரயில் (கோப்புப்படம்)

ரயில் (கோப்புப்படம்)

ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் கீழ் ஏற்கனவே மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  இந்தியன் ரயில்வே, 13 லட்சம் பணியாளர்களுக்கான மருத்துவ வசதிகளை விரிவுபடுத்தும் நோக்கில், மருத்துவ காப்பீடு திட்டத்தை வழங்க பரிசீலித்து ஆய்வுக்குழு அமைத்துள்ளது.

  இந்திய ரயில்வே அறிக்கையில், ஏற்கனவே ரயில்வே ஊழியர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் தாராளமயமாக்கப்பட்ட சுகாதாரத்திட்டம் மற்றும் மத்திய அரசின் சுகாதார சேவைகள் ஆகியவற்றின் கீழ் மருத்துவ உதவி அளிக்கப்பட்டுவரும் நிலையில், தற்போது விரிவான மருத்துவ காப்பீடு வழங்க திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவசர காலத்தின் போது ரயில்வே ஊழியர்களுக்கு காப்பீடு தொகையை வழங்கும் நோக்கில் விரிவான காப்பீடு திட்டம் குறித்த அனைத்து அம்சங்களையும் ஆராய குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே இதுகுறித்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்கள் உள்ளிட்டோர் கருத்து தெரிவிக்கலாம் எனவும் இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

  586 சுகாதார மையங்கள், நாடு முழுவதும் ரயில்வே துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 56 மருத்துமனைகளும், 45 துணை மருத்துவமனைகளும், 16 மண்டல மருத்துவமனைகளும் செயல்பட்டுவருகின்றன. அதில் 2,500 மருத்துவர்களும், 35,000 மருத்துவ பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Published by:Gunavathy
  First published:

  Tags: Health Benefits, Indian Railways