ஹோம் /நியூஸ் /இந்தியா /

ரயில் இஞ்சினையே மோசடியாக விற்பனை செய்த ஊழியர் - ரயில்வேதுறையினர் ஷாக்

ரயில் இஞ்சினையே மோசடியாக விற்பனை செய்த ஊழியர் - ரயில்வேதுறையினர் ஷாக்

Rail Engine

Rail Engine

ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில் இஞ்சினையே மோசடியாக விற்பனை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  ரயில்வே துறையில் பொறியாளராக பணியாற்றி வரும் நபர், போலி ஆவணங்கள் தயார் செய்து ரயில் இஞ்சினை மோசடியாக விற்பனை செய்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் ரயில்வேதுறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  பீகார் மாநிலம் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்தில் தான் இந்த பகீர் மோசடி நடந்துள்ளது. சமஸ்திபூர் லோகோ டீசல் ஷெட்டில் பொறியாளராக பணியாற்றி வருபவர் ராஜீவ் ரஞ்சன் ஜா, இவர் அந்த கோட்டத்தில் உள்ள புர்னியா கோர்ட் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழமையான ஸ்டீம் ரயில் இஞ்சினை போலி ஆவணங்கள் தயார் செய்து வேறு ஒருவருக்கு விற்பனை செய்தது தெரியவந்துள்ளது.

  டிசம்பர் 14ம் தேதி அரங்கேறிய இந்த விற்பனை குறித்த தகவல்கள் இரண்டு நாட்களுக்கு பின்னரே தெரியவந்துள்ளது. மிகவும் திட்டமிடப்பட்டு அரங்கேறியிருக்கும் இந்த மோசடி ரயில்வேதுறையினரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

  இதையும் படிங்க:  ஆசியாவுடன் கடலுக்கடியிலான ஃபைபர்-ஆப்டிக் கேபிள் சிஸ்டம் - கூகுள், மெட்டாவிற்கு அமெரிக்கா ஆதரவு

  மோசடி நடந்தது எப்படி?

  கடந்த டிசம்பர் 14ம் தேதியன்று அவுட் போஸ்ட் இன்சார்ஜ் ஒருவர், பழமையான ஸ்டீம் ரயில் இஞ்சினை பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா, கேஸ் கட்டரை பயன்படுத்தி உடைத்துக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். அவருக்கு சுஷில் என்ற நபர் உதவியாக இருந்துள்ளார். ரயில் இஞ்சினை உடைப்பதை நிறுத்தும்படி அவர் கூறியபோது, சம்பந்தப்பட்ட பொறியாளர் ரயில் இஞ்சினை உடைத்து டீசல் ஷெட்டுக்கு அனுப்பும் உத்தரவு ஒன்றை அவரிடம் காட்டியிருக்கிறார்.

  டீசல் ஷெட்டின் பிக் அப் வேன் ரிஜிஸ்டரை மறுநாள் அந்த அதிகாரி சரிபார்த்த போது, எந்த வித ரயில் ஸ்கிராப் பொருட்களும் டீசல் ஷெட்டை அடையவில்லை என்பதை தெரிந்து கொண்டார். சந்தேகமடைந்த அந்த அதிகாரி, தனது துறைக்கு சென்று இந்த ரயில் இஞ்சினை உடைக்க ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதா என சரிபார்த்த போது அப்படி எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என தெரிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

  இதையும் படிங்க:   சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் பாகிஸ்தானின் பிரபல கிரிக்கெட் வீரர் Yasir Shah மீது போலீசார் வழக்குப்பதிவு

  இதனையடுத்து சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவ் ரஞ்சன் ஜா மீதும் அவருக்கு உடந்தையாக இருந்த ரயில் நிலைய பாதுகாவலர், ஊழியர்கள் என மொத்தம் 7 பேர் மீது ரயில் இஞ்சினை மோசடி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து ரயில்வே போலீசார் 7 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்து வருவோரை தேடி வருகின்றனர். மேலும் சம்பந்தப்பட்ட பொறியாளர் ராஜீவை ரயில்வே நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

  ரயில்வே ஊழியர் ஒருவர் ரயில் இஞ்சினையே மோசடியாக விற்பனை செய்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

  Published by:Arun
  First published:

  Tags: Bihar, Indian Railways