Home /News /national /

ரயில்வேயில் 2.98 லட்சம் காலியிடங்கள்...! தேர்வு அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் பதில்

ரயில்வேயில் 2.98 லட்சம் காலியிடங்கள்...! தேர்வு அறிவிப்பு குறித்து மத்திய அமைச்சர் பதில்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

இந்திய ரயில்வேயில் 2.98 லட்சம் காலியிடங்கள் உள்ளதாகவும், அதை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று மத்திய அரசு கூறியுள்ளது.

ரயில்வே துறையில் ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 2.98 லட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், இதனை நிரப்புவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியுஸ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் 4.61 லட்சம் பேர் ரயில்வே துறையில் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 1991-ம் ஆண்டு ரயில்வேயில் 16,54,985 ஊழியர்கள் பணிபுரிந்தனர், தற்போது 12,48,101 ஆக உள்ளது. ஆனாலும் ரயில்வே எந்த பிரச்னையும் இல்லாமல் இயங்கி வருகிறது.

ரயில்வே-க்கு ஆர்ஆர்பி மற்றும் ஆர்ஆர்சி அமைப்புகள் கீழ் பணிக்கு ஆட்கள் எடுக்கப்படுகிறார்கள். 1,51,843 பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவடைந்துள்ளது.

1,42,577 பணியிடங்களுக்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. வரும் தேர்வுகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட உள்ளது என்று பியூஷ் கோயால் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

மேலும் பார்க்க:
Published by:Tamilarasu J
First published:

Tags: Indian Railways, Parliament Session, Piyush Goyal

அடுத்த செய்தி